மீண்டும் விக்ரம் பிரபுவுடன் இணையும் லட்சுமிமேனன்- இயக்குனர் யார் தெரியுமா?

  • November 4, 2020 / 10:42 PM IST

தமிழ்சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை லட்சுமிமேனன்.

2012ஆம் ஆண்டு வெளிவந்த “சுந்தரபாண்டியன்” மற்றும் “கும்கி” திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த இரண்டு படங்களுமே இவருக்கு வெற்றியைத் தேடித் தந்ததால் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க கமிட்டானார் லட்சுமிமேனன்.

குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், ரெக்க என்று தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வெற்றி வாகை சூடி உள்ளார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் 2017 ஆம் ஆண்டு பிரேக் எடுத்து தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். இந்த சமயங்களில் சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் லட்சுமிமேனன் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு அவ்வபோது பதிலளித்து வந்தார்.

தற்போது லட்சுமி மேனன் “கும்கி” திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் விக்ரம் பிரபுவுடன் இணைந்து தன் அடுத்த படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை ‘கொம்பன்’ படத்தை இயக்கிய முத்தையா இயக்கப் போவதாகவும் செய்தி வெளியாகி உள்ளது.

இதனால் மீண்டும் லக்ஷ்மிமேனன் முத்தையா மற்றும் விக்ரம் பிரபுவுடன் இணையும் திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திரைப்படத்திற்கு “பேச்சி” என்று பெயரிட்டுள்ளார்கள். இந்த படம் கண்டிப்பாக திரையரங்கில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus