விஷாலின் திருமணம்… அப்போது அந்த முடிவை எடுப்பேன் – லக்ஷ்மி மேனன்!

  • September 8, 2020 / 12:14 PM IST

‘சுந்தர பாண்டியன்’ என்ற தமிழ் படம் மூலம் ஃபேமஸான நடிகை லக்ஷ்மி மேனன். அதன் பிறகு ‘கும்கி, குட்டிப் புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா’ போன்ற தமிழ் படங்களில் நடித்திருந்தார். பின், படங்களில் நடிக்காமல் பிரேக் எடுத்துக் கொண்டார் லக்ஷ்மி மேனன். இப்போது மீண்டும் பல இயக்குநர்களிடம் கதை கேட்டு, மூன்று படங்களில் நடிக்க டிக் அடித்திருக்கிறார்.

இவர் நடித்த ‘பாண்டிய நாடு’ மற்றும் ‘நான் சிகப்பு மனிதன்’ இரண்டு படங்களிலுமே விஷால் தான் கதையின் நாயகனாக வலம் வந்திருந்தார். இவ்விரு படங்களும் வந்த போது நடிகர் விஷாலும், நடிகை லக்ஷ்மி மேனனும் காதலித்து வருவதாக கோலிவுட்டில் தண்டோரா போடப்பட்டது. பின், விஷாலுக்கும் ஆந்திராவைச் சேர்ந்த அனிஷா என்ற பெண்ணிற்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

அதன் பிறகு திருமணம் தொடர்பாக எந்த தகவலையும் விஷால் அறிவிக்கவில்லை. இந்நிலையில், நடிகை லக்ஷ்மி மேனன் மீடியாவுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றில் நடிகர் விஷால் தொடர்பாக பேசுகையில் “விஷாலிடம் எப்போதாவது மெசேஜில் தான் பேசுவேன். விஷால் அவரோட திருமணத்திற்கு என்னை அழைத்தால், கண்டிப்பா போகணும். ஆனா, அப்போது எனது சூழலை பொறுத்து தான் நான் முடிவு எடுப்பேன்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus