நடிகர் கருணாஸுடன் இணைகிறாரா லட்சுமிமேனன்?

  • October 8, 2020 / 08:31 PM IST

தமிழ்சினிமாவில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகை லட்சுமிமேனன்.

2012ஆம் ஆண்டு வெளிவந்த “சுந்தரபாண்டியன்” மற்றும் “கும்கி” திரைப்படங்கள் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். இந்த இரண்டு படங்களுமே இவருக்கு வெற்றியைத் தேடித் தந்ததால் அடுத்தடுத்து தமிழ் படங்களில் நடிக்க கமிட்டானார் லட்சுமிமேனன்.

குட்டிப்புலி, நான் சிகப்பு மனிதன், பாண்டியநாடு, மஞ்சப்பை, ஜிகர்தண்டா, கொம்பன், வேதாளம், மிருதன், ரெக்க என்று தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்து வெற்றி வாகை சூடி உள்ளார்.

தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் 2017 ஆம் ஆண்டு பிரேக் எடுத்து தனது கல்லூரிப் படிப்பை முடித்தார். தற்போது இவர்‌ விஜய் பிரபுவுடன் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் கருணாஸுடன் இவர் இணைந்து நடிப்பதாக இவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் கருணாஸ் நடிப்பில் திண்டுக்கல் சாரதி திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. இதனால் இவர்கள் இருவரும் இந்த படத்தில் இணைந்து நடிக்கப் போகிறார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

ஆனால் இந்த புகைப்படம் கொம்பன் திரைப்படத்தின் போது எடுக்கப்பட்டது என்று விளக்கம் லட்சுமி மேனன் தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்க மாட்டார்கள் என்று ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus