லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவரவுள்ள அடுத்த திரைப்படம்!

  • September 3, 2020 / 09:00 AM IST

சமீபத்தில் இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட வனிதா விஜயகுமார் பிரச்சனையில் தனது கருத்துக்களைக் கூறி அதனால் அவமானப்பட்டு பின்பு வனிதாவுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியவர் நடிகை மற்றும் இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன்.

தற்போது லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் ஒரு தமிழ்ப் படத்தின் ஸ்கிரிப்ட்டை கேட்காமலே அந்த படத்தின் வாய்ப்பை மறுத்துவிட்டதாகவும், இந்த வாய்ப்பு போராடும் ஒரு நடிகருக்கு கிடைக்கும் என்று நம்புவதாகவும், தான் ஏற்கனவே ஒப்பந்தமாகியிருந்த தெலுங்கு படத்தில் நடிக்க தயாராகவுள்ளதாகவும், அதுமட்டுமின்றி தான் தனது அடுத்த படத்தை இயக்குவதற்கான ஸ்கிரிப்டை தயார் செய்து வருவதாகவும் தற்போது வெளியிட்டுள்ளார்.

நாடு முழுவதும் திரைப்பட படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில் தற்போது லட்சுமி ராமகிருஷ்ணனின் திரைப்படமும் களத்தில் இறங்கியுள்ளது.

ஏற்கனவே லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான “ஹவுஸ் ஓனர்” என்ற திரைப்படம் பலரது பாராட்டுக்களைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அரக்கோணம் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி லக்ஷ்மி ராமகிருஷ்ணன் தொடர்ந்து நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

படங்களில் நடிப்பது மற்றும் இயக்குவது என்று படு பிஸியாக இருந்த லட்சுமி ராமகிருஷ்ணன் சமீபத்தில் வனிதாவின் பிரச்சனையில் கருத்துக்கள் கூற போய் அது அவருக்கே வினையாய் முடிந்தது. இதனால் இனிமேல் எந்த ஒரு பொது பிரச்சனையிலும் தன்னை கருத்துக்கூற அழைக்க வேண்டாம் என்றும் அவர் கூறியுள்ளாராம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus