பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு ‘கொரோனா’ பாதிப்பு.. ICU-வில் அனுமதி!

மக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சமீபத்தில், குஷ்பூ, ஷோபனா, ரைசா வில்சன், ஷெரின், த்ரிஷா, வரலக்ஷ்மி, மீனா, மகேஷ் பாபு, அருண் விஜய், வடிவேலு, அர்ஜுன் போன்ற பல முன்னணி பிரபலங்களுக்கு ‘கொரோனா’ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்குரிய சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ICU-வில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

92 வயதான பாடகி லதா மங்கேஷ்கர் தமிழ், ஹிந்தி, மலையாளம், குஜராத்தி, கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடி ரசிகர்களிடம் லைக்ஸ் குவித்திருக்கிறார். இவர் தமிழ் மொழியில் ‘இங்கே பொன் வீணை, ஆராரோ ஆராரோ,வளையோசை, எங்கிருந்தோ அழைக்கும்’ போன்ற பாடல்களை பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.