மறைந்த நடிகர் டாக்டர் சேதுராமன் மனைவி கர்ப்பமாக இருந்தார். தற்போது இவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதனால் “குட்டி சேதுராமன்” பிறந்து விட்டார் என்று அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்து தெரிவித்து இதை கொண்டாடி வருகிறார்கள்.
‘கண்ணா லட்டு தின்ன ஆசையா” படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் டாக்டர் சேதுராமன். இந்த படத்தை தொடர்ந்து வாலிபராஜா, சக்க போடு போடு ராஜா மற்றும் 50/50 படங்களில் நடித்த இவர் கடந்த மார்ச் 26 ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் சோகத்தில் ஆழ்ந்தார்கள். இவர் கடந்த 2011ம் ஆண்டு உமையாள் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் இறந்த பொழுது இவரது மனைவி கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுக்கு ஏற்கனவே ஒரு மகள் இருக்கிறார்.
சந்தானத்தின் மிக நெருங்கிய நண்பரான இவர் பல நட்சத்திரங்களுக்கு தோல் மருத்துவராகவும் இருந்து வந்தார். சேதுராமனின் மறைவு திரையுலகினரிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.
தற்போது சேதுராமனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. மீண்டும் சேதுராமன் பிறந்துள்ளார் என்று அவரது மனைவி இந்த செய்தியை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இவருக்கு நண்பர்களும் உறவினர்களும் பாராட்டுகளை குவித்து வருகிறார்கள். நண்பர்கள் அனைவரும் “குட்டி சேது” என்று குறிப்பிட்டு வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.