மறைந்த நடிகர் சேதுராமன் மனைவியின் உருக்கமான பதிவு!
August 18, 2020 / 07:02 PM IST
|Follow Us
சமீபத்தில் நடிகர் மற்றும் மருத்துவர் சேதுராமன் திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இவர் மரணம் அடைந்தபோது கர்ப்பமாக இருந்த அவர் மனைவி சமீபத்தில் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது.
இதனால் இவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மீண்டும் சேதுராமன் பிறந்து விட்டார் என்று கொண்டாடி வந்தனர். இந்நிலையில் தற்போது சேதுராமனின் மனைவி உமையால் தன் கணவரை நினைத்து உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது, “நான் என்ன நீங்கள் என்ன இல்லை” என்ற தலைப்பில் நான் நீங்களாக மாறிவிட்டேன் நீங்கள் நம் குழந்தையாக மாறி விட்டீர்கள் உங்களை விட்டு நான் பிரியவில்லை என்று மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவில் தனக்கும் தன் கணவர் சேதுராமனுக்கும் உள்ள வித்தியாசம் குறித்தும் அவரை எவ்வளவு இவர் காதலிக்கிறார் என்பது குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.
பலரும் அவரது உருக்கமான பதிவை லைக் செய்து உங்களைப் போன்ற மனைவி கிடைப்பதற்கு சேதுராமன் கொடுத்து வைத்திருக்க வேண்டும். அவர் உங்கள் குழந்தை வடிவில் பிறந்திருக்கிறார் நீங்கள் மகிழ்ச்சியாக இருங்கள் என்று குறிப்பிட்டு வருகிறார்கள்.