ராஷ்மிகாவின் லேடஸ்ட் க்ளிக்!

  • July 28, 2022 / 10:53 AM IST

நடிகர் விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 66 படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்கு முன்னர் நடந்தது . அதன் பிறகு படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் சில நாட்கள் நடந்தது . அதன் பிறகு படத்தின் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.

இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வருகிறார் . தோழா படத்தை இயக்கிய இயக்குனர் வம்சி இந்த படத்தை இயக்கி வருகிறார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் , பிரகாஷ் ராஜ் , பிரபு , நடிகை ஜெயசுதா , நடிகை சங்கீதா மற்றும் பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடிப்பதாக தகவல் வெளியானது . முழுக்க முழுக்க குடும்ப படமாக இந்த படம் உருவாக இருக்கிறது .

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் தனது புதிய போட்டோ ஒன்றை சமீபத்தில் பகிர்ந்து உள்ளார் .இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது .சிகப்பு நிற உடையில் ராஷ்மிகா மிக அழகாக இருக்கும் புகைப்படத்தை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர் .

 

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus