இவ்ளோ அழகை என்ன சொல்லி வர்ணிக்க?… புது போட்டோஷூட்டில் பேரழகாய் மின்னும் மாளவிகா!

  • January 20, 2023 / 12:32 PM IST

பிரபல நடிகை மாளவிகா மோகனன் நடித்து தமிழில் இதுவரை மூன்று படங்கள் தான் ரிலீஸாகி இருக்கிறது. ஆனால், அதற்குள் இவருக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகி இருக்கிறது. இதற்கு காரணம் இவர் நடித்திருக்கும் மூன்று படங்களுமே முன்னணி ஹீரோக்களின் படங்கள். முதல் படமான ‘பேட்ட’-யில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் தான் ஹீரோ.

இரண்டாவது படமான ‘மாஸ்டர்’-யில் ‘தளபதி’ விஜய் தான் ஹீரோ. ‘பேட்ட’ படத்தில் சசிக்குமாருக்கு ஜோடியாக ‘பூங்கொடி’ என்ற கதாபாத்திரமாகவும், ‘மாஸ்டர்’ படத்தில் ‘சாரு’ என்ற கதாபாத்திரமாகவும் வலம் வந்திருந்தார் மாளவிகா மோகனன்.

மூன்றாவது படமான ‘மாறன்’ல் ஹீரோவாக தனுஷ் நடித்திருந்தார். இந்த படத்தை இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கியிருந்தார். ஏற்கனவே, மாளவிகா மலையாளத்தில் மூன்று படங்களிலும், கன்னடம் மற்றும் ஹிந்தியில் ஒரு படமும் நடித்துள்ளார்.

இப்போது மாளவிகா மோகனன் நடிப்பில் தமிழில் ‘தங்கலான்’, ஹிந்தியில் ‘யுத்ரா’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராமில் அசத்தலான போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் ரசிகர்களை ‘வாவ்’ சொல்ல வைத்திருக்கிறது.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus