தல அஜித்தின் அம்மா அப்பா இவர்கள் தானா?

  • July 4, 2020 / 02:26 PM IST

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித் 1990ஆம் ஆண்டு “என் வீடு என் கணவர்” என்ற படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டார்.

பின்பு 1996-ஆம் வருடம் வெளிவந்த “காதல் கோட்டை” படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் கனவுக்கண்ணனாக வலம் வரத்தொடங்கினார். பின்பு 1999-ஆம் வருடம் வெளிவந்த “அமர்க்களம்” படத்தின் மூலம் ஆக்ஷன் ஹீரோவாக மாறினார்.

‌அதே ஆண்டு இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் வெளிவந்த “வாலி” படத்தில் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் அவர் சிறந்த நடிப்பால் சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் அவார்ட் பெற்றார்.

அமர்க்களம் படத்தில் அவருடன் நடித்த நடிகை ஷாலினியை காதலித்து 2000-ம் வருடம் திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு அனோஷ்கா, ஆத்விக் என இரண்டு குழந்தைகள் தற்போது உள்ளார்கள்.

தொடர்ந்து பல வெற்றிப் படங்களில் நடித்து தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கும் அஜித் குமார், ஒரு பிரபல கார் ரேஸரும் கூட. அஜித் எவ்வளவு பெரிய பிரபலமான நடிகராக இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாத தன்னடக்கமான மனிதர் என்று பலர் கூறியிருக்கிறார்கள். இதுவே இவருக்கான ரசிகர் பட்டாளத்தை குவித்துள்ளது.

அதிகமாக வெளியிடங்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் படத்தின் ப்ரோமோஷன்களுக்கோ வந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாத அஜித், தனது குடும்பம் மற்றும் குடும்பம் சார்ந்த விஷயங்களை மிகவும் பர்சனலாக கடைபிடித்து வருகிறார்.

அதனால் அவரின் குடும்ப புகைப்படங்கள் காண்பது மிகவும் அரிது‌. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள அவரது குடும்ப புகைப்படத்தில் அஜித்தின் தாய், தந்தை மற்றும் குழந்தைகள் இருக்கிறார்கள். இதனால் இந்த புகைப்படங்கள் அஜித் ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.

2019ஆம் ஆண்டு எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் “நேர்கொண்ட பார்வை” படம் வெளியானது. இதைத் தொடர்ந்து தற்போது வினோத் இயக்கத்திலேயே மீண்டும் “வலிமை” என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார்.கொரோனா லாக்டவுன் காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus