ஃபிளாஷ்பேக் ரஜினியுடன் நான் – ராகவா லாரன்ஸ்

  • June 29, 2020 / 09:32 PM IST

தமிழில் பிரபல முன்னணி நடிகர்களுள் ஒருவரான ராகவா லாரன்ஸ் 1999 ஆம் ஆண்டு “உன்னை கொடு என்னை தருவேன்” என்ற படத்தின் மூலம் நடிகராக தமிழ் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார்.

இவர் ரஜினியின் பெரிய ரசிகர் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம், மேலும் இவரும் ரஜினியைப் போலவே ராகவேந்திரா சுவாமியை பின்பற்றி வருகிறார்.

தற்போது ராகவா லாரன்ஸ் ட்விட்டரில் ரஜினியுடன் தான் எடுத்துக் கொண்ட பழைய புகைப்படத்தை வெளியிட்டு அவருடனான மறக்க முடியாத நினைவு என்று பகிர்ந்துள்ளார்.

ரஜினியுடன் ராகவா லாரன்ஸ் “உழைப்பாளி” படத்தில் குரூப் டான்ஸராக இருந்தபொழுது எடுத்த புகைப்படமாம். இந்த புகைப்படத்தை வெளியிட்டு அவர், உழைப்பு இருந்தால் யாரும் உயரத்தை எட்ட முடியும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் “முனி4:காஞ்சனா3” . அடுத்து இவரது இயக்கத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “இலட்சுமிபாம்” . மேலும் சந்திரமுகியின் சீகுவல் படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus