முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் கேரியரில் மிகப் பெரிய வெற்றி அடைந்த படங்களின் லிஸ்டில் கண்டிப்பாக ‘சந்திரமுகி’ படத்துக்கும் ஒரு இடம் உண்டு. 2005-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை பிரபல இயக்குநர் பி.வாசு இயக்கியிருந்தார். இதில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார்.
இந்த படத்தில் ‘சந்திரமுகி’ என்ற பவர்ஃபுல்லான டைட்டில் ரோலில் ஜோதிகா நடித்திருந்தார். மேலும், பிரபு, வடிவேலு, நாசர், வினீத், மாளவிகா மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, ஹாரர் ஜானரில் வெளி வந்த இந்த படத்தின் பார்ட் 2-வை இயக்க பி.வாசு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் தீவிர ரசிகரும், பிரபல நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிக்கப்போகிறார். இதனை சுபாஷ்கரன் தனது ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ மூலம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கவிருக்கிறார். இதிலும் காமெடியில் கலக்க வடிவேலு நடிக்கவிருக்கிறாராம். எம்.எம்.கீரவாணி இசையமைக்கவுள்ள இதற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார். மிக விரைவில் இதன் ஷூட்டிங் ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Elated to announce
our next Big project #Chandramukhi2
Starring @offl_Lawrence & Vaigaipuyal #Vadivelu
Directed by #PVasu
Music by @mmkeeravaani
Cinematography by @RDRajasekar
Art by #ThottaTharani
PRO @proyuvraajpic.twitter.com/NU76VxLrjH
— Lyca Productions (@LycaProductions) June 14, 2022