‘டுபாக்கூர்’னு சொன்ன ‘பிக் பாஸ் 4’ பாலாஜிக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்படும்… அதிரடி முடிவெடுத்த ஜோ மைக்கேல்!

  • October 15, 2020 / 10:14 AM IST

விஜய் டிவியில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த அக்டோபர் 4-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகத் துவங்கி உள்ளது . இந்த சீசன் 4-யில் கலந்து கொள்ளப்போகும் பிரபலங்கள் யார்? என தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள். தினமும் பல பிரபலங்களின் பெயர்களை குறிப்பிட்ட வண்ணம் இருந்தது கோலிவுட் வட்டாரம்.

தொடர்ந்து 105 நாட்கள் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரியோ ராஜ், நடிகை சனம் ஷெட்டி, நடிகை ரேகா, மாடல் பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத், நடிகை ஷிவானி நாராயணன், நடிகர் ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல்முருகன், நடிகர் ஆரி, மாடல் சோமசேகர், நடிகை கேப்ரில்லா, விஜய் டிவி அறந்தாங்கி நிஷா, நடிகை ரம்யா பாண்டியன், நடிகை சம்யுக்தா கார்த்திக், நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, ‘சூப்பர் சிங்கர்’ ஆஜித் ஆகிய 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த வாரம் ‘பிக் பாஸ்’ வீட்டில் மாடல் பாலாஜி முருகதாஸ், நடிகை சனம் ஷெட்டியிடம் “நீங்க கலந்து கொண்டு வெற்றிபெற்ற அழகிப் போட்டியை நடத்திய நிறுவனம் ஒரு டுபாக்கூர்” என்று பேசியதால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. தற்போது, இது தொடர்பாக இந்த அழகிப் போட்டியை நடத்தி வரும் நிறுவனம் சார்பில் ஜோ மைக்கேல் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “இதுக்கு பாலாஜி முருகதாஸ் பதில் சொல்லி ஆக வேண்டும் அல்லது மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு எங்களோட வழக்கறிஞர் மூலமாக லீகல் நோட்டீஸ் அனுப்பப்படும்” என்று கூறியுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus