லோகேஷ் படத்தில் கைகோர்க்கும் லெஜெண்ட் சரவணன் !

  • February 21, 2023 / 02:15 PM IST

நடிகர் விஜய் நடித்த வாரிசு படம் கடந்த வாரம் வெளியானது . இதனை தொடர்ந்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார் . இந்த படத்தின் பூஜை சென்னையில் சில வாரங்களுக்குமுன் நடந்தது முடிந்தது . தயாரிப்பாளர் லலித் இந்த படத்தை தயாரிக்கிறார் .

இயக்குநர்கள் கவுதம் வாசுதேவ் வாசுதேவ் மேனன் மிஷ்கின் , நடிகர்கள் அர்ஜுன் , சஞ்சய் டட் , மன்சூர் அலி கான் , ப்ரியா ஆனந்த் , த்ரிஷா , உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கியமான பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக அதிகார்வப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது . இதனால் விஜய் ரசிகர்கள் தற்போது உற்சாகத்தில் உள்ளனர் .

லியோ படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து வருகிறது . இந்நிலையில் லியோ படத்தில் சில காட்சிகளில் அண்ணாச்சி நடிக்க உள்ளாராம். அதற்காக இப்போது காஷ்மீர் சென்றுள்ளார் என்று கூறப்படுகிறது . காஷ்மீரில் உள்ள பிரம்மாண்ட ஹோட்டலில் தங்கியிருக்கும் அண்ணாச்சி வீடியோ எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் லியோ படத்தில் அண்ணாச்சி இணைந்திருப்பது கிட்டத்தட்ட உறுதி ஆகிவிட்டது.

இயக்குநர் லோகேஷ் சாதாரண கதாபாத்திரங்களை கூட வேற லெவலில் சீனில் நடிக்க வைத்து அசத்துவார் . அந்த வகையில் லெஜெண்ட் சரவணன் எந்த மாதிரியான கதாபாத்திரத்தை கொடுத்து இருப்பார் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமுடன் உள்ளனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus