புதிய லுக்கில் லெஜண்ட் சரவணன்… தீயாய் பரவும் ஸ்டில்ஸ்!

  • March 13, 2023 / 06:12 PM IST

‘சரவணா ஸ்டோர்ஸ்’ லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்து, தயாரித்த படம் ‘தி லெஜண்ட்’. கடந்த ஆண்டு (2022) வெளியான இந்த படத்தை இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி இணைந்து இயக்கியிருந்தனர்.

இதில் மிக முக்கிய ரோல்களில் கீத்திகா, ஊர்வசி ரவுத்தேலா, விவேக், நாசர், பிரபு, விஜயக்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இந்த படத்துக்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார், ரூபன் படத்தொகுப்பாளராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குநராகவும் பணியாற்றியிருந்தனர், பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுதியிருந்தார்.

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் லெஜண்ட் சரவணனின் நடிப்பை கிண்டலடித்து கலாய்த்தனர். ஆனால், லெஜண்ட் சரவணனோ அடுத்த படத்திற்கு தயாராகி விட்டார். தற்போது, இவர் தனது ட்விட்டரில் புது போட்டோஷூட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus