Legend Saravanan : தனுஷ் பட இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் லெஜண்ட் சரவணன்!

  • December 22, 2023 / 06:43 PM IST

‘சரவணா ஸ்டோர்ஸ்’ லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்து, தயாரித்த படம் ‘தி லெஜண்ட்’. கடந்த ஆண்டு (2022) வெளியான இந்த படத்தை இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி இணைந்து இயக்கியிருந்தனர்.

இதில் மிக முக்கிய ரோல்களில் கீத்திகா, ஊர்வசி ரவுத்தேலா, விவேக், நாசர், பிரபு, விஜயக்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்திருந்தனர். டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருந்த இந்த படத்துக்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருந்தார், ரூபன் படத்தொகுப்பாளராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குநராகவும் பணியாற்றியிருந்தனர், பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுதியிருந்தார்.

இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளங்களில் லெஜண்ட் சரவணனின் நடிப்பை கிண்டலடித்து கலாய்த்தனர். ஆனால், அவரோ அடுத்த படத்திற்கு தயாராகி வந்தார்.

தற்போது, லெஜண்ட் சரவணனின் புதிய படத்தை ‘எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி, பட்டாஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கவிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. மிக விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus