லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்துள்ள ‘தி லெஜண்ட்’… வெளியானது சூப்பரான ட்ரெய்லர்!

  • May 30, 2022 / 07:57 PM IST

‘சரவணா ஸ்டோர்ஸ்’ லெஜண்ட் சரவணன் ஹீரோவாக நடித்து, தயாரித்துள்ள படம் ‘தி லெஜண்ட்’. இந்த படத்தை இயக்குநர்கள் ஜேடி – ஜெர்ரி இணைந்து இயக்கியுள்ளனர். இதில் மிக லுக்கிய ரோல்களில் கீத்திகா, ஊர்வசி ரவுத்தேலா, விவேக், நாசர், பிரபு, விஜயக்குமார், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்துக்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார், ரூபன் படத்தொகுப்பாளராகவும், எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்குநராகவும் பணியாற்றியுள்ளனர், பட்டுக்கோட்டை பிரபாகரன் வசனம் எழுதியுள்ளார்.

நேற்று இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் ‘தி லெஜண்ட்’ படக்குழுவினருடன், பல முன்னணி திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர். தற்போது, படத்தின் ட்ரெய்லர் யூடியூபில் வெளியாகியுள்ளது. இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus