தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர் இருந்தலர் கவுண்டமணி. ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்தார். இவர் நடிகர் செந்திலுடன் இணைந்த நடித்த அனைத்து நகைச்சுவை காட்சிகளும் இன்றும் ரசிகர்கள் ரசித்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கரகாட்டக்காரன் படத்தில் வரும் வாழைப்பழ நகைச்சுவை காட்சி யாராலாயும் மறக்க முடியாத காட்சி.
இந்நிலையில் 90- களில் பின்புலிருந்து இவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது. பிறகு 2000 தொடக்க காலகட்டத்தில் சில படங்கள் நடித்தார் அதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாபா தோல்வி அடைந்தது. அதன் பின் தனக்கு கதை பிடித்து இருந்தால் அந்த படத்தில் நாயகனாக நடித்து வந்தார்.
அந்த வகையில் தற்போது கவுண்டமணி நடிக்கும் ” பழனிச்சாமி வாத்தியார் ” படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது.வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் யோகி பாபு, கஞ்சா கருப்பு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
கவுண்டமணி மீண்டும் நடிக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி தந்துள்ளது.
கவுண்டமணி நடிக்கும் " பழனிச்சாமி வாத்தியார் " படத்தின் பூஜை இனிதே நடைபெற்றது.
வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் பிரமாண்டமாக தயாரிக்கும்
கவுண்டமணி கதாநாயகனாக நடிக்கிறார்.
யோகி பாபு, கஞ்சா கருப்பு இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். pic.twitter.com/rbdh6966Pe
— Ramesh Bala (@rameshlaus) January 20, 2023