தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் 67-வது படமான ‘லியோ’வை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார்.
இப்படம் கடந்த அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ நிறுவனம் சார்பில் லலித் குமார் அதிக பொருட்செலவில் தயாரித்திருந்தார். இதில் விஜய்-க்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.
மேலும், மிக முக்கிய ரோல்களில் சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த், சாண்டி, ‘பிக் பாஸ்’ ஜனனி ஆகியோர் நடித்திருந்தனர். இதற்கு அனிருத் இசையமைத்திருந்தார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்திருந்தார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டான இப்படம் கடந்த நவம்பர் 24-ஆம் தேதி இந்தியாவிலும், நவம்பர் 28-ஆம் தேதி உலக அளவிலும் பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-ல் ரிலீஸானது. தற்போது, இந்த படத்தின் எடிட்டிங் போது நீக்கப்பட்ட காட்சி ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
#Leo – Delete Scene #Leo @actorvijay #Varisu #LeoBlockbuster pic.twitter.com/8g6lmATwoT
— ️இளைய தளபதி❗ (@kowsiranjith12) November 30, 2023