மாமா ! நீங்க இருங்க நான் பட்டாசு வைக்கிறேன் !

  • October 28, 2022 / 11:12 PM IST

கோலிவுட் சினிமாவின் முன்னணி திரைப்பட தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரொடக்ஷன்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருபவர் தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர். இவர் தயாரிப்பில் ‘நளனும் தமயந்தியும்’ ’சுட்டகதை’ ’நட்புனா என்னனு தெரியுமா’ ’முருங்கக்காய் சிப்ஸ்’ உட்பட பல படங்கள் வெளியாகி இருக்கிறது .

இந்த நிலையில் லிப்ரா புரொடக்ஷன்ஸ் நிறுவனர் ரவீந்தர் சந்திரசேகர் படத்தயாரிப்பு மட்டுமின்றி சில யூடியூப் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பேசி இருந்தார் மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியை மையமாக வைத்து ஒரு நிகழ்ச்சியிலும் இவர் பங்காற்றினார் . இந்நிலையில் லிப்ரா புரொடக்ஷன் நிறுவனர் ரவீந்தர் சந்திரசேகர் நடிகை மகாலட்சுமி அவர்களை திருமணம் செய்து கொண்டார் .

இவர்களது திருமணம் இன்று நடந்த நிலையில் இந்த திருமணம் குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வந்தது . ரவீந்தர் சந்திரசேகர் மற்றும் நடிகை மகாலட்சுமி ஆகியோர் தொடர்ந்து பல சமூக வலைதள பக்கங்களில் ட்ரெண்ட் ஆகி வந்தனர் .

இந்நிலையில் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் அவர்களது தல தீபாவளி விழாவை சிறப்பாக கொண்டாடி உள்ளனர் . இருவரும் சேர்ந்து பட்டாசு வெடிக்கும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus