சுசீந்திரன் தயாரிப்பில் பாரதிராஜா நடிக்கும் ‘மார்கழி திங்கள்’… ஷூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட திடீர் விபத்து!

  • May 31, 2023 / 07:45 PM IST

தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சுசீந்திரன். இவர் கதை-வசனம் எழுதி, தயாரித்து வரும் புதிய படம் ‘மார்கழி திங்கள்’. இந்த படத்தை இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், பிரபல நடிகருமான மனோஜ் பாரதிராஜா இயக்கி வருகிறார்.

இதில் ஷ்யாம் செல்வன், ரக்ஷனா, பாரதிராஜா மற்றும் பலர் நடிக்கின்றனர். இதற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்து வருகிறார், சூர்யா ஒளிப்பதிவு செய்கிறார், தியாகு படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். சமீபத்தில், ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று மாலை இந்த படத்தின் ஷூட்டிங் பழனியில் நடந்து வந்தபோது மழை பெய்திருக்கிறது. அப்போது பெரிய குடை லைட்டில் இடி விழுந்து, ஐந்து லைட் மேன்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பித்தார்கள் என தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை சுசீந்திரனே தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ மூலம் தெரிவித்ததுடன், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த வீடியோஸ் மற்றும் புகைப்படங்களையும் வெளியிட்டிருக்கிறார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus