பிரபல நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடிக்க என்னை அணுகியபோது த்ரிஷாவுடன் பெட்ரூம் காட்சி இருக்கும் என்று நினைத்தேன். அவரை அப்படியே கையில் தூக்கிக் கொண்டு போவேன் என்று எண்ணினேன். நான் எத்தனை படத்துல அதுபோன்ற கற்பழிப்பு காட்சிகளில் நடித்திருக்கிறேன்” என்று பேசியிருந்தார்.
இவர் பேசியது மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. பலர் கண்டனம் தெரிவித்தனர். பின், மன்சூர் அலிகான் த்ரிஷவிடம் மன்னிப்பு கேட்டு அறிக்கை வெளியிட்டார். இந்த பிரச்சனையைத் தொடர்ந்து பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி மீடியாவுக்கு கொடுத்த ஒரு பேட்டியில் “நடிகை மனிஷா யாதவ்வுக்கு பிரபல இயக்குநர் சீனு ராமசாமி ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பாலியல் தொல்லை கொடுத்தார்.
அதன் பிறகு மனிஷா யாதவ், அந்த படத்திலிருந்து விலகியதுடன், ஒரு கட்டத்தில் திரையுலகிற்கே குட்-பை சொல்லி விட்டார்” என்று பேசியிருந்தார். இதற்கு இயக்குநர் சீனு ராமசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் மறுப்பு தெரிவித்திருந்தார். பின், மனிஷா யாதவ் “9 ஆண்டுகளுக்கு முன்பு அவர் பற்றி நான் கூறியதாக சொல்லப்படும் அனைத்து விஷயங்களுமே உண்மைதான்” என்று இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
தற்போது, யூடியூபில் திரைப்படங்களை விமர்சனம் செய்து ஃபேமஸான ‘ப்ளூ சட்டை’ மாறன் தனது ட்விட்டர் பக்கத்தில் “த்ரிஷா போன்ற முன்னணி நடிகைகளுக்கு ஆதரவாக பேசும் பத்திரிக்கை, செய்தி சேனல்கள், யூட்யூப் சேனல்கள்..
மனீஷா யாதவிற்கு ஆதரவாக பேசாதது ஏன்?
குஷ்பூ அவர்களே.. இதுகுறித்து சம்மந்தப்பட்ட நாயகியிடம் பேசி, தேசிய மகளிர் ஆணையம் சார்பாக விசாரிக்கவும். அவருக்கு துணை நிற்கவும். மன்சூர் மட்டும் தக்காளி தொக்கா?” என்று பதிவிட்டுள்ளார்.