சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள். இதுவரை திரையரங்குகளில் வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் செய்த இந்திய படங்களின் லிஸ்ட் இதோ…
1.டங்கல் :
பாலிவுட் நடிகர் அமீர் கானின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘டங்கல்’. 2016-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான நித்தேஷ் திவாரி இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் சாக்ஷி தன்வார், பாத்திமா சனா சாய்க், சைரா வாசிம், சன்யா மல்ஹோத்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
2.பாகுபலி 2 :
பிரபாஸின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘பாகுபலி 2’. 2017-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன், ரானா டகுபதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
3.RRR :
பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் கடந்த ஆண்டு (2022) மார்ச் 25-ஆம் தேதி வெளியான படம் ‘RRR’. இந்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் – ராம் சரண் இணைந்து நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் சமுத்திரக்கனி, அஜய் தேவ்கன், ஒலிவியா மோரிஸ், அலியா பட், ரே ஸ்டீவன்சன், அலிசன் டூடி, ஸ்ரேயா சரண் மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.
4.கே.ஜி.எஃப் 2 :
யாஷ் நடிப்பில் கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் 14-ஆம் தேதி வெளியான படம் ‘கே.ஜி.எஃப் 2’. இந்த படத்தை இயக்குநர் பிரஷாந்த் நீல் இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் ஸ்ரீநிதி ஷெட்டி, ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் ஆகியோர் நடித்திருந்தனர். ‘அதீரா’ என்ற பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் சஞ்சய் தத் நடித்திருந்தார்.
5.பதான் :
ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு (2023) ஜனவரி 25-ஆம் தேதி வெளியான படம் ‘பதான்’. இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான சித்தார்த் ஆனந்த் இயக்கியிருந்தார். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோன் நடித்திருந்தார். மேலும், பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ஜான் ஆப்ரஹாம் நடித்திருந்தார். கெஸ்ட் ரோலில் சல்மான் கான் நடித்திருந்தார்.
6.ஜவான் :
ஷாருக்கான் நடிப்பில் இந்த ஆண்டு (2023) செப்டம்பர் 7-ஆம் தேதி வெளியான படம் ‘ஜவான்’. இந்த படத்தை இயக்குநர் அட்லி இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா, தீபிகா படுகோன், ப்ரியாமணி, யோகி பாபு ஆகியோர் நடித்திருந்தனர். பவர்ஃபுல்லான வில்லன் ரோலில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருந்தார்.