நடிகர் தனுஷ் டு நடிகை சமந்தா… விவாகரத்து செய்த திரையுலக பிரபலங்களின் லிஸ்ட்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். பிரபல இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகன் தான் தனுஷ். 2004-ஆம் ஆண்டு நடிகர் தனுஷ், முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார்.

ஐஸ்வர்யா ‘3, வை ராஜா வை’ போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். தனுஷ் – ஐஸ்வர்யா தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்நிலையில், நேற்று (ஜனவரி 17-ஆம் தேதி) இரவு நடிகர் தனுஷும், ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டரில் அறிவித்தனர். இதுவரை விவாகரத்து செய்த திரையுலக பிரபலங்களின் லிஸ்ட் இதோ…

1.சமந்தா :

சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் சமந்தா. 2017-ஆம் ஆண்டு தனது முதல் படத்தின் கதாநாயகனான நாகசைத்தன்யாவையே காதலித்து திருமணம் செய்து கொண்டார் சமந்தா. கடந்த ஆண்டு (2021) அக்டோபர் 2-ஆம் தேதி நடிகை சமந்தாவும், நாகசைத்தன்யாவும் விவாகரத்து செய்து கொள்ளப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

2.விஷ்ணு விஷால் :

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். 2010-யில் ரஜினி என்பவரை விஷ்ணு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் உள்ளார். பின், ரஜினியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2018-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் விஷ்ணு விஷால்.

3.டி.இமான் :

சினிமாவில் பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் டி.இமான். 2008-ஆம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்து கொண்டார் டி.இமான். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த ஆண்டு (2021) டிசம்பர் 29-ஆம் தேதி டி.இமான் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

4.சௌந்தர்யா ரஜினிகாந்த் :

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சௌந்தர்யா. நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் இரண்டாவது மகளான சௌந்தர்யா, 2010-யில் அஷ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின், அஷ்வினுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் சௌந்தர்யா.

5.சோனியா அகர்வால் :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சோனியா அகர்வால். 2006-ஆம் ஆண்டு நடிகர் தனுஷின் அண்ணனும், இயக்குநருமான செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் சோனியா அகர்வால். பின், செல்வராகவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் சோனியா அகர்வால்.

6.பிரபு தேவா :

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபு தேவா. இவர் 1995-ஆம் ஆண்டு ரம்லத் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின், ரம்லத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2011-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் பிரபு தேவா.

7.அமலா பால் :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் அமலா பால். 2014-ஆம் ஆண்டு பிரபல இயக்குநர் ஏ.எல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்து கொண்டார் அமலா பால். பின், ஏ.எல்.விஜய்யுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2017-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் அமலா பால்.

8.சுகன்யா :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் சுகன்யா. 2002-ஆம் ஆண்டு ஸ்ரீதர் ராஜகோபாலன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் சுகன்யா. பின், ஸ்ரீதர் ராஜகோபாலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2003-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் சுகன்யா.

9.ரேவதி :

சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ரேவதி. 1986-ஆம் ஆண்டு நடிகரும், இயக்குநருமான சுரேஷ் மேனனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரேவதி. பின், சுரேஷ் மேனனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2013-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் ரேவதி.

10.கிருஷ்ணா :

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கிருஷ்ணா. 2014-யில் ஹேமலதா என்பவரை கிருஷ்ணா திருமணம் செய்து கொண்டார். பின், ஹேமலதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தார் கிருஷ்ணா.

11.கார்த்திக் குமார் :

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்திக் குமார். 2005-யில் பாடகியும், நடிகையுமான சுசித்ராவை கார்த்திக் குமார் திருமணம் செய்து கொண்டார். பின், சுசித்ராவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை விவாகரத்து செய்யப்போவதாக 2017-ஆம் ஆண்டு அறிவித்தார் கார்த்திக் குமார்.

12.சித்தார்த் :

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சித்தார்த். 2003-யில் மேக்னா என்பவரை சித்தார்த் திருமணம் செய்து கொண்டார். பின், மேக்னாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2007-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் சித்தார்த்.

13.பிரகாஷ் ராஜ் :

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரகாஷ் ராஜ். 1994-யில் நடிகை லலிதா குமாரியை பிரகாஷ் ராஜ் திருமணம் செய்து கொண்டார். பின், லலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2009-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் பிரகாஷ் ராஜ்.

14.அரவிந்த் சாமி :

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அரவிந்த் சாமி. 1994-யில் காயத்ரி ராமமூர்த்தி என்பவரை அரவிந்த் சாமி திருமணம் செய்து கொண்டார். பின், காயத்ரியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2010-ஆம் ஆண்டு சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் அரவிந்த் சாமி.

15. பிரஷாந்த் :

தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரஷாந்த். 2006-யில் கிரகலக்ஷ்மி என்பவரை பிரஷாந்த் திருமணம் செய்து கொண்டார். பின், மூன்று ஆண்டுகளுக்கு பிறகு கிரகலக்ஷ்மியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றுக் கொண்டார் பிரஷாந்த்.

Share.