• Home Icon Home
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • ஓடிடி
  • கலெக்‌ஷன்ஸ்
தமிழ்
  • English
  • తెలుగు
  • हिंदी
  • சினிமா செய்திகள்
  • சிறப்பு கட்டுரை
  • விமர்சனம்
  • Featured Stories
  • Videos
  • Full Movies
Hot Now
  • #காந்தார
  • #இளவரசன்
  • #வரிசு

FilmyFocus » Featured Stories » 2021-ல் நேரடியாக OTT-யில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தமிழ் படங்களின் லிஸ்ட்!

2021-ல் நேரடியாக OTT-யில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தமிழ் படங்களின் லிஸ்ட்!

  • December 14, 2021 / 09:38 PM IST
  • | Follow Us
  • Filmy Focus Google News
2021-ல் நேரடியாக OTT-யில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தமிழ் படங்களின் லிஸ்ட்!

ஒரு படம் திரையரங்குகளில் வெளியாகிய பின் பல நாட்களுக்கு பிறகு OTT தளங்களில் வெளியாவது வழக்கமாக இருந்தது. இப்போதெல்லாம் தியேட்டருக்கு நோ சொல்லிவிட்டு, நேரடியாகவே OTT-யில் திரைப்படங்கள் வெளியாகி வருகிறது. அப்படி இந்த ஆண்டு (2021) OTT-யில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படங்களின் லிஸ்ட் இதோ…

1.ஜெய் பீம் :

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. சூர்யாவின் கேரியரில் 39-வது படமான ‘ஜெய் பீம்’-ஐ த.செ.ஞானவேல் இயக்கியிருந்தார். இப்படம் இந்த ஆண்டு நவம்பர் 2-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யில் ரிலீஸானது. சூர்யா வக்கீலாக நடித்திருந்த இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ், மணிகண்டன், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், தமிழ், எம்.எஸ்.பாஸ்கர், ஜெயபிரகாஷ், இளவரசு, சுஜாதா சிவக்குமார், சிபி தாமஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு பாப்புலர் இசையமைப்பாளர்களில் ஒருவரான ஷான் ரோல்டன் இசையமைத்திருந்தார், எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

2.சார்பட்டா பரம்பரை :

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ஆர்யா. இயக்குநர் பா.இரஞ்சித் – நடிகர் ஆர்யா காம்போவில் உருவான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் இந்த ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’யில் ரிலீஸானது. இதில் ஹீரோயினாக துஷாரா நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் பசுபதி, சந்தோஷ் பிரதாப், கலையரசன், ஜான் விஜய், அனுபமா குமார், சஞ்சனா நடராஜன், காளி வெங்கட், மாறன் மற்றும் பலர் நடித்திருந்தனர். குத்துச் சண்டை வீரராக ஆர்யா வலம் வந்த இந்த படத்துக்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

3.மண்டேலா :

சினிமாவில் டாப் காமெடியன்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் ஹீரோவாக நடித்த ‘மண்டேலா’ திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’யில் ரிலீஸானது. இந்த படத்தை இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியிருந்தார், மிக முக்கிய ரோல்களில் சங்கிலி முருகன், ஜி.எம்.சுந்தர், ஷீலா ராஜ்குமார், கண்ணா ரவி மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்திருந்தார், பிலோமின் ராஜ் படத்தொகுப்பாளராகவும், விது அய்யன்னா ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றியிருந்தார்கள்.

4.சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் :

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் வஸந்த். இவர் இயக்கிய ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ என்ற திரைப்படம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 26-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘சோனி லைவ்’-வில் ரிலீஸானது. இதில் பார்வதி, லக்ஷ்மி ப்ரியா, காளீஸ்வரி ஸ்ரீநிவாசன், கருணாகரன், சுந்தர் ராமு, கார்த்திக் கிருஷ்ணா, ஹமரேஷ், மாரிமுத்து மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படத்துக்கு ‘இசைஞானி’ இளையராஜா இசையமைத்திருந்தார், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார்.

5.விநோதய சித்தம் :

சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சமுத்திரக்கனி. இவர் நடித்த ‘விநோதய சித்தம்’ என்ற திரைப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘ஜீ5’யில் ரிலீஸானது. ஸ்ரீவத்சன் – விஜி இருவருடன் இணைந்து சமுத்திரக்கனியே திரைக்கதை – வசனம் எழுதி இந்த படத்தை இயக்கியிருந்தார். இதில் சமுத்திரக்கனியுடன் இணைந்து தம்பி இராமையா, தீபக், ஜெயபிரகாஷ், முனிஷ்காந்த், ஹரி, நமோ நாராயணன், ‘பிச்சைக்காரன்’ மூர்த்தி, சஞ்சிதா ஷெட்டி, ஸ்ரீரஞ்சனி, யுவலக்ஷ்மி, ஷெரின் ஆகியோர் நடித்திருந்தனர். சத்யா இசையமைத்திருந்த இந்த படத்துக்கு என்.கே.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருந்தார், ஏ.எல்.ரமேஷ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இதனை ‘அபிராமி மீடியா ஒர்க்ஸ்’ என்ற நிறுவனம் சார்பில் அபிராமி ராமநாதன் தயாரித்திருந்தார்.

6.கசட தபற :

சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்புதேவன். இவர் இயக்கிய ஹைப்பர் லிங்க் படமான ‘கசட தபற’ இந்த ஆண்டு ஆகஸ்ட் 27-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘சோனி லைவ்’-வில் ரிலீஸானது. இதில் ஹரிஷ் கல்யாண், சந்தீப் கிஷன், ஷாந்தனு, வெங்கட் பிரபு நடித்திருந்தனர். மேலும், மிக முக்கிய ரோல்களில் பிரேம்ஜி, ரெஜினா, ப்ரியா பவானி ஷங்கர், விஜயலக்ஷ்மி, அரவிந்த ஆகாஷ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus

Tags

  • #jai bhim
  • #kasada thapara
  • #list of 2021 best films released in ott
  • #mandela
  • #saarpatta parambarai

Also Read

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Enthiran : மெகா ஹிட்டான ஷங்கரின் ‘எந்திரன்’-க்காக ரஜினி வாங்கிய சம்பளம் எவ்ளோ தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Rajinikanth & Salman Khan : ரஜினி – சல்மான் கான் இணைந்து நடிக்கும் படம்… இதன் இயக்குநர் யார் தெரியுமா?

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Game Changer : ராம் சரணின் ‘கேம் சேஞ்சர்’ பட ரிலீஸுக்கு நாள் குறித்த இயக்குநர் ஷங்கர்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Vettaiyan : ஆரம்பமானது ரஜினி போலீஸாக நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங்!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Blue Sattai Maran & Anti Indian : OTT-யில் ரிலீஸானது ‘ப்ளூ சட்டை’ மாறனின் ‘ஆன்டி இண்டியன்’!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

Nandita Swetha : செக்ஸி போஸ் கொடுத்த நடிகை நந்திதா… வைரலாகும் வீடியோ!

related news

அடுத்த சம்பத்திற்கு தயாரான  ஜெய் பீம் கூட்டணி !

அடுத்த சம்பத்திற்கு தயாரான ஜெய் பீம் கூட்டணி !

ஜெய் பீம் படத்திற்கு கிடைத்த புதிய அங்கீகாரம் !

ஜெய் பீம் படத்திற்கு கிடைத்த புதிய அங்கீகாரம் !

ஜெய் பீம் படத்தின் 200-வது நாள் !

ஜெய் பீம் படத்தின் 200-வது நாள் !

ஜெய் பீம் இயக்குனரின் அடுத்த படத்தின் நாயகன் யார் தெரியுமா ?

ஜெய் பீம் இயக்குனரின் அடுத்த படத்தின் நாயகன் யார் தெரியுமா ?

ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெறாத ‘ஜெய் பீம்’… வருத்தத்தில் சூர்யா ரசிகர்கள்!

ஆஸ்கர் இறுதிப்பட்டியலில் இடம்பெறாத ‘ஜெய் பீம்’… வருத்தத்தில் சூர்யா ரசிகர்கள்!

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்துக்கு சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த 3 விருதுகள்!

சூர்யாவின் ‘ஜெய் பீம்’ படத்துக்கு சர்வதேச திரைப்பட விழாவில் கிடைத்த 3 விருதுகள்!

trending news

latest news

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

Titaani – Eturivin Pelikokemus ja Loistavat Bonukset

10 hours ago
Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

Online- Kasino beze Kontroly Totožnosti: Vaší Nezávislost během Hraní

10 hours ago
Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

Kumobet – Din fullständiga guide till spelupplevelser och vinstmöjligheter

10 hours ago
Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

Hurmio: Suomen Kasinopelien Moderni Standardi

10 hours ago
Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

Glücksspielhaus ohne erforderliche Identitätsprüfung: Direkter Spielspaß ohne Wartezeit

10 hours ago
  • English
  • Telugu
  • Tamil
  • Hindi
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
  • Follow Us -

Copyright © 2026 | Kollywood Latest News | Tamil Movie Reviews

powered by veegam
  • Home
  • About Us
  • Privacy Policy
  • Disclaimer
  • Contact Us
Go to mobile version