2021-ல் வெளியாகி ஃப்ளாப்பான டாப் 10 படங்களின் லிஸ்ட்!

இந்த ஆண்டு (2021) திரையரங்குகளிலும், நேரடியாக பிரபல OTT தளங்களிலும் பல படங்கள் வெளியானது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்டு ஃப்ளாப்பான டாப் 10 படங்களின் லிஸ்ட் இதோ…

1.பூமி :

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் ‘ஜெயம்’ ரவி. இவரது நடிப்பில் இந்த ஆண்டு (2021) ஜனவரி 14-ஆம் தேதி) பொங்கல் ஸ்பெஷலாக பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டார்’யில் ரிலீஸான படம் ‘பூமி’. இயக்குநர் லக்ஷ்மன் இயக்கியிருந்த இந்த படத்தில் ‘ஜெயம்’ ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்திருந்தார்.

2.ஈஸ்வரன் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சிலம்பரசன் TR. இவரது நடிப்பில் இந்த ஆண்டு (2021) ஜனவரி 14-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸான படம் ‘ஈஸ்வரன்’. இயக்குநர் சுசீந்திரன் இயக்கியிருந்த இந்த படத்தில் ஹீரோயினாக நிதி அகர்வாலும், மிக முக்கிய ரோலில் ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவும் நடித்திருந்தார்கள்.

3.காடன் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். இவரது நடிப்பில் இந்த ஆண்டு (2021) திரையரங்குகளில் ரிலீஸான படம் ‘காடன்’. இயக்குநர் பிரபு சாலமன் இயக்கியிருந்த இந்த படத்தில் விஷ்ணு விஷாலுடன் இணைந்து ராணா டகுபதி, ஜோயா ஹூசைன், ஸ்ரியா பில்கோங்கர் ஆகியோர் நடித்திருந்தனர்.

4.ஜகமே தந்திரம் :

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இந்த ஆண்டு (2021) ஜூன் 18-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’யில் ரிலீஸான படம் ‘ஜகமே தந்திரம்’. இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் தனுஷுடன் சேர்ந்து ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்ஷ்மி, கலையரசன், ஜோஜு ஜார்ஜ், சஞ்சனா நடராஜன் ஆகியோர் நடித்திருந்தனர்.

5.லாபம் :

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் இந்த ஆண்டு (2021) செப்டம்பர் 9-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான படம் ‘லாபம்’. இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கியிருந்த இந்த படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்தார்.

6.அனபெல் சேதுபதி :

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் இந்த ஆண்டு (2021) செப்டம்பர் 17-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸான படம் ‘அனபெல் சேதுபதி’. அறிமுக இயக்குநர் தீபக் சுந்தர்ராஜன் இயக்கியிருந்த இந்த படத்தில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருந்தார்.

7.பேய் மாமா :

சினிமாவில் டாப் காமெடியன்களில் ஒருவராக வலம் வருபவர் யோகி பாபு. இவர் ஹீரோவாக நடித்த ‘பேய் மாமா’ என்ற திரைப்படம் இந்த ஆண்டு (2021) செப்டம்பர் 24-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இயக்கியிருந்த இந்த படத்தில் மாளவிகா மேனன், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

8.எனிமி :

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் இந்த ஆண்டு (2021) தீபவாளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸான படம் ‘எனிமி’. இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கியிருந்த இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினி நடித்திருந்தார், வில்லனாக ஆர்யா நடித்திருந்தார்.

9.எம்ஜிஆர் மகன் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் இந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸான படம் ‘எம்ஜிஆர் மகன்’. இயக்குநர் பொன்ராம் இயக்கியிருந்த இந்த படத்தில் மிக முக்கிய ரோலில் சத்யராஜும், ஹீரோயினாக மிருணாளினி ரவியும் நடித்திருந்தனர்.

10.ராஜவம்சம் :

சினிமாவில் பாப்புலர் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் இந்த ஆண்டு (2021) நவம்பர் 26-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸான படம் ‘ராஜவம்சம்’. இயக்குநர் கதிர்வேலு இயக்கியிருந்த இந்த படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்திருந்தார்.

Share.