தமிழ் சினிமாவில் மாஸ் காட்டி வரும் ஒவ்வொரு ஹீரோவுக்கும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தன் ரசிகர்களுக்காக தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்கள் ஹீரோக்கள். இதுவரை தமிழில் வெளியாகி ரூ.300 கோடிக்கு மேல் வசூல் செய்த படங்களின் லிஸ்ட் இதோ…
1.2.0 :
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘2.0’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான ஷங்கர் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் அக்ஷய் குமார், எமி ஜாக்சன், ஐசரி கணேஷ், மயில்சாமி, சுதன்ஷு பாண்டே மற்றும் பலர் நடித்திருந்தனர்.
2.விக்ரம் :
‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் 2022-ஆம் ஆண்டு வெளியான படம் ‘விக்ரம்’. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, செம்பன் வினோத் ஜோஸ், ஃபஹத் ஃபாசில், நரேன், காளிதாஸ் ஜெயராம், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். கெஸ்ட் ரோலில் டாப் ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடித்திருந்தார்.
3.பிகில் :
‘தளபதி’ விஜய் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிகில்’. இந்த படத்தை டாப் இயக்குநர்களில் ஒருவரான அட்லி இயக்கியிருந்தார். இதில் மிக முக்கிய ரோல்களில் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், விவேக், இந்துஜா, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
4.பொன்னியின் செல்வன் – 1 :
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பொன்னியின் செல்வன் 1’. இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்திருந்தார்கள்.
5.வாரிசு :
‘தளபதி’ விஜய் நடிப்பில் இந்த ஆண்டு (2023) ஜனவரி 11-ஆம் தேதி வெளியான படம் ‘வாரிசு’. இந்த படத்தை இயக்குநர் வம்சி இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, எஸ்.ஜே.சூர்யா, பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, சங்கீதா, யோகி பாபு, ஸ்ரீகாந்த், ஷாம், கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் நடித்திருந்தனர்.
6.பொன்னியின் செல்வன் – 2 :
பிரபல இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இந்த ஆண்டு (2023) ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியான படம் ‘பொன்னியின் செல்வன் 2’. இதில் விக்ரம், ஐஸ்வர்யா ராய் பச்சன், ‘ஜெயம்’ ரவி, கார்த்தி, த்ரிஷா, விக்ரம் பிரபு, ஜெயராம், பிரபு, ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஷோபிதா துலிபாலா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், ரகுமான், கிஷோர், அஷ்வின், ரியாஸ் கான், லால் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
7.ஜெயிலர் :
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் இந்த ஆண்டு (2023) ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான படம் ‘ஜெயிலர்’. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியிருந்தார். இதில் முக்கிய ரோல்களில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன், வசந்த் ரவி, மிர்னா மேனன், ‘ரித்து ராக்ஸ்’ ரித்விக், சுனில், தமன்னா மற்றும் பலர் நடித்திருந்தனர். மேலும், கெஸ்ட் ரோல்களில் மோகன்லால், ஷிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் நடித்திருந்தனர்.