சிம்புவுக்காக காத்திருக்கும் இயக்குநர்கள் !

  • November 28, 2022 / 11:15 PM IST

நடிகர் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் வெந்து தணிந்தது காடு . நீண்ட வருடம் கழித்து இயக்குனர் ஜி.வி.எம் அவர்களுடன் இணைந்து பணியாற்றினார் சிம்பு .இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து இருந்தார் . இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது .

இந்நிலையில் நடிகர் சிம்பு தற்போது சில்லுனு ஒரு காதல் படத்தின் இயக்குனர் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார் . கர்நாடகா மாநிலம் பெல்லாரி எனும் ஊரில் இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது . இடையில் நடிகர் சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் அவர்களுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடிகர் சிம்பு தனது தந்தையின் சிகிச்சைக்காக அயல்நாடு சென்று இதனால் . இதனால் பத்து தல படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தொடங்காமல் இருந்தது .

அதன் பிறகு மீண்டும் பத்து தல படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது . இது ஒரு பக்கம் இருக்க நடிகர் சிம்பு இயக்குனர் முருகதாஸ் மற்றும் சுதா கொங்கோரா ஆகிய இருவரிடமும் கதை கேட்டு உள்ளார் என்றும் விரைவில் யாரேனும் ஒருவருக்கு ஓகே சொல்லிவிடுவார் என்றும் நம்பப்படுகிறது . தற்போது இருவரும் சிம்புவின் முடிவுக்காக காத்துகொண்டு இருக்கின்றனர் .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus