தமிழில் படங்கள் இயக்கிய பெண் இயக்குநர்கள்!

  • July 29, 2020 / 09:41 PM IST

தமிழ் திரையுலகில் ஒரு வருடத்திற்கு பல ஆண் இயக்குநர்கள் அறிமுகமாகி ஹிட் கொடுத்து, அடுத்தடுத்து பல படங்கள் இயக்கி வருகிறார்கள். அதேபோல், பல திறமையான பெண்களும் திரையுலகில் இயக்குநராக களமிறங்கி சாதனை படைத்து வருகின்றனர். தமிழில் படங்கள் இயக்கிய பெண் இயக்குநர்களின் லிஸ்ட் இதோ..

1. சுஹாஷினி மணிரத்னம் :

தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் சுஹாசினி. இவர் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னமின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது. சுஹாசினி, 1995-ஆம் ஆண்டு வெளியான ‘இந்திரா’ என்ற படத்தினை இயக்கினார். இதில் அரவிந்த் சாமி, அனுஹாசன் ஜோடியாக நடித்திருந்தனர்.

2. சுதா கொங்கரா :

தமிழில் 2010-ஆம் ஆண்டு வெளியான ‘துரோகி’ படத்தை இயக்கினார் சுதா கொங்கரா. ‘துரோகி’ படத்துக்கு பிறகு மாதவனின் ‘இறுதிச்சுற்று’ படத்தை இயக்கினார். இப்போது இவர் இயக்கியிருக்கும் ‘சூரரைப் போற்று’ ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. இந்த படத்தில் கதையின் நாயகனாக சூர்யா நடித்துள்ளார்.

3. அஞ்சனா :

தமிழில் 2011-ஆம் ஆண்டு வெளியான ‘வெப்பம்’ படத்தை இயக்கியவர் அஞ்சனா. இந்த படத்தில் நானி, நித்யா மேனன், கார்த்திக் குமார், பிந்து மாதவி ஆகியோர் நடித்திருந்தனர்.

4. லக்ஷ்மி ராமகிருஷ்ணன் :

தமிழில் பிரபல நடிகையாக இருப்பவர் லக்ஷ்மி ராமகிருஷ்ணன். இவர் 2012-ஆம் ஆண்டு வெளியான ‘ஆரோகணம்’ என்ற படத்தினை இயக்கினார். ‘ஆரோகணம்’ படத்துக்கு பிறகு ‘நெருங்கி வா முத்தமிடாதே, அம்மணி, ஹவுஸ் ஓனர்’ ஆகிய படங்களை இயக்கினார்.

5. ஐஸ்வர்யா.ஆர்.தனுஷ் :

முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா, 2012-ஆம் ஆண்டு வெளியான ‘3’ என்ற படத்தை இயக்கினார். இதில் அவரது கணவர் தனுஷே ஹீரோவாக நடித்திருந்தார். ‘3’ படத்துக்கு பிறகு கெளதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’ படத்தை இயக்கினார் ஐஸ்வர்யா.ஆர்.தனுஷ்.

6. கிருத்திகா உதயநிதி :

பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா, 2013-ஆம் ஆண்டு வெளியான ‘வணக்கம் சென்னை’ என்ற படத்தினை இயக்கினார். ‘வணக்கம் சென்னை’ படத்துக்கு பிறகு விஜய் ஆண்டனியின் ‘காளி’ படத்தை இயக்கினார்.

7. சௌந்தர்யா ரஜினிகாந்த் :

முன்னணி நடிகர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யா, 2014-ஆம் ஆண்டு வெளியான ‘கோச்சடையான்’ என்ற அனிமேஷன் படத்தை இயக்கினார். இதில் அவரது தந்தை ரஜினிகாந்தே நடித்திருந்தார். ‘கோச்சடையான்’ படத்துக்கு பிறகு தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார் சௌந்தர்யா ரஜினிகாந்த்.

8. அனிதா உதீப் :

தமிழில் 2009-ஆம் ஆண்டு வெளியான ‘குளிர் 100°’ என்ற படத்தை இயக்கியவர் அனிதா உதீப். இந்த படத்துக்கு பிறகு ’90 ml’ என்ற படத்தை இயக்கினார். இதில் கதையின் நாயகியாக ‘பிக் பாஸ்’ புகழ் ஓவியா நடித்திருந்தார்.

9. ஹலிதா ஷமீம் :

தமிழில் 2014-ஆம் ஆண்டு வெளியான ‘பூவரசம் பீப்பி’ என்ற படத்தை இயக்கியவர் ஹலிதா ஷமீம். இதனைத் தொடர்ந்து ‘சில்லுக் கருப்பட்டி’ எனும் ஆந்தாலஜி படத்தை இயக்கினார். இப்போது ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘ஏலே’ மற்றும் ‘மின் மினி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

10. மதுமிதா :

தமிழில் 2008-ஆம் ஆண்டு வெளியான ‘வல்லமை தாராயோ’ என்ற படத்தை இயக்கியவர் மதுமிதா. இதனைத் தொடர்ந்து ‘கொல கொலயா முந்திரிக்கா, மூணே மூணு வார்த்தை, கே.டி (எ) கருப்புதுரை’ ஆகிய படங்களை இயக்கினார்.

11. வி.ப்ரியா :

தமிழில் 2005-ஆம் ஆண்டு வெளியான ‘கண்ட நாள் முதல்’ என்ற படத்தை இயக்கியவர் வி.ப்ரியா. இதனைத் தொடர்ந்து ‘கண்ணாமூச்சி ஏனடா’ படத்தை இயக்கினார். இதில் ப்ரித்விராஜ், சத்யராஜ், சந்தியா ஆகியோர் நடித்திருந்தனர்.

12. நந்தினி.ஜே.எஸ் :

தமிழில் 2009-ஆம் ஆண்டு வெளியான ‘திரு திரு துறு துறு’ என்ற படத்தை இயக்கியவர் நந்தினி.ஜே.எஸ். இதனைத் தொடர்ந்து ‘நிலா நிலா ஓடி வா’ என்ற வெப் சீரிஸை இயக்கினார். இவ்வெப் சீரிஸில் அஷ்வின், சுனைனா ஜோடியாக நடித்திருந்தனர்.

13. ஷோபா சந்திரசேகர் :

இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியும், நடிகர் விஜய்யின் அம்மாவுமான ஷோபா, 1991-ஆம் ஆண்டு வெளியான ‘நண்பர்கள்’ என்ற படத்தை இயக்கினார். ‘நண்பர்கள்’ படத்துக்கு பிறகு ‘இன்னிசை மழை’ எனும் படத்தை இயக்கினார்.

14. காயத்ரி :

தமிழில் 2007-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ஓரம்போ’. இந்த படத்தை தனது கணவர் புஷ்கருடன் இணைந்து இயக்கியிருந்தார் காயத்ரி. இதனைத் தொடர்ந்து ‘வ குவாட்டர் கட்டிங்’ மற்றும் ‘விக்ரம் வேதா’ ஆகிய படங்களை இருவரும் சேர்ந்து இயக்கினார்கள்.

15. காயத்ரி ரகுராம் :

தமிழில் பிரபல நடிகையாகவும், நடன இயக்குநராகவும் இருப்பவர் காயத்ரி ரகுராம். இவர் ‘யாதுமாகி நின்றாய்’ என்ற படத்தை இயக்கி, கதையின் நாயகியாகவும் நடித்திருந்தார். சமீபத்தில், இப்படம் OTT-யில் வெளியானது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus