விஜயகாந்த் டு விஜய் சேதுபதி… பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட தமிழ் படங்கள்!
January 29, 2021 / 02:58 PM IST
|Follow Us
திரையுலகில் இயக்குநர்கள் தாங்களே கற்பனையாக யோசித்த ஐடியாவை டெவலப் செய்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படங்கள் ஒரு புறம் சூப்பர் ஹிட்டாகிறது. இன்னொரு புறம் மற்ற மொழிகளில் மெகா ஹிட்டான படங்களின் ரீமேக் ரைட்ஸை வாங்கி அந்தந்த மொழிகளுக்கு ஏற்றவாறு சில மாற்றங்களை மட்டுமே செய்து இயக்கும் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. தமிழில் வெற்றி பெற்ற சில படங்கள் அதிக மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டிருக்கிறது. அப்படி பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்ட தமிழ் படங்களின் லிஸ்ட் இதோ…
1. வானத்தைப்போல :
தமிழில் 2000-யில் வெளியான படம் ‘வானத்தைப்போல’. இந்த படத்தை பிரபல இயக்குநர் விக்ரமன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்த் நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் மீனா, பிரபு தேவா, லிவிங்க்ஸ்டன், கௌசல்யா, அஞ்சு அரவிந்த், தேவன் மற்றும் பலர் நடித்திருந்தனர். தமிழில் சூப்பர் ஹிட்டான இப்படம் தெலுங்கு, கன்னடம், போஜ்புரி,பெங்காலி என நான்கு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
2. சேது :
தமிழில் 1999-யில் வெளியான படம் ‘சேது’. இந்த படத்தை பிரபல இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘சீயான்’ விக்ரம் நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் அபிதா, சிவக்குமார், ஸ்ரீமன், லாவண்யா, மோகன் வைத்யா, மனோபாலா மற்றும் பலர் நடித்திருந்தனர். தமிழில் சூப்பர் ஹிட்டான இப்படம் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், ஒடியா, பங்களாதேஷி பெங்காலி என ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
3. சார்லி சாப்ளின் :
தமிழில் 2002-யில் வெளியான படம் ‘சார்லி சாப்ளின்’. இந்த படத்தை பிரபல இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இயக்கியிருந்தார். இதில் பிரபு – பிரபு தேவா இணைந்து நடித்திருந்தனர். மேலும், முக்கிய ரோல்களில் லிவிங்க்ஸ்டன், அபிராமி, காயத்ரி ரகுராம், விந்தியா, மோனல், மகாநதி ஷங்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர். தமிழில் சூப்பர் ஹிட்டான இப்படம் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி என ஆறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
4. ரமணா :
தமிழில் 2002-யில் வெளியான படம் ‘ரமணா’. இந்த படத்தை பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்த் நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் சிம்ரன், அஷிமா பல்லா, விஜயன், யூகி சேது, ரியாஸ் கான், ரவிச்சந்திரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். தமிழில் சூப்பர் ஹிட்டான இப்படம் ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், பங்களாதேஷி பெங்காலி, இந்தியன் பெங்காலி என ஐந்து மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
5. நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் :
தமிழில் 2012-யில் வெளியான படம் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’. இந்த படத்தை பிரபல இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் காயத்ரி, பகவதி பெருமாள், ராஜ்குமார், விக்னேஸ்வரன் மற்றும் பலர் நடித்திருந்தனர். தமிழில் சூப்பர் ஹிட்டான இப்படம் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, மராத்தி, குஜராத்தி என ஆறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.