வெளியான முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் அதிக வசூல் செய்த விஜய்யின் டாப் 6 படங்களின் லிஸ்ட்!

  • January 19, 2023 / 04:40 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் சில படங்கள் தெலுங்கு மொழியிலும் டப் செய்யப்பட்டு வெளியாகியிருக்கிறது. இதுவரை தெலுங்கில் வெளிவந்த விஜய் படங்களில் முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் அதிக வசூல் செய்த டாப் 6 படங்களின் லிஸ்ட் இதோ…

1.மாஸ்டர் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2021-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியான படம் ‘மாஸ்டர்’. இந்த படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் ரூ.6.01 கோடி வசூல் செய்தது.

2.பீஸ்ட் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு (2022) ஏப்ரல் 13-ஆம் தேதி வெளியான படம் ‘பீஸ்ட்’. இந்த படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் ரூ.4.81 கோடி வசூல் செய்தது.

3.வாரிசு :

‘தளபதி’ விஜய் நடிப்பில் இந்த ஆண்டு (2023) ஜனவரி 14-ஆம் தேதி வெளியான படம் ‘வாரிசு’ (தெலுங்கில் ‘வாரசுடு’). இந்த படத்தை இயக்குநர் வம்சி இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் ரூ.3.10 கோடி வசூல் செய்தது.

4.பிகில் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பிகில்’ (தெலுங்கில் ‘விசில்’). இந்த படத்தை இயக்குநர் அட்லி இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் ரூ.2.58 கோடி வசூல் செய்தது.

5.சர்கார் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘சர்கார்’. இந்த படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் ரூ.2.32 கோடி வசூல் செய்தது.

6.மெர்சல் :

‘தளபதி’ விஜய் நடிப்பில் 2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மெர்சல்’ (தெலுங்கில் ‘அதிரிந்தி’). இந்த படத்தை இயக்குநர் அட்லி இயக்கியிருந்தார். இப்படம் வெளியாகி முதல் நாளே ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டும் ரூ.1.33 கோடி வசூல் செய்தது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus