சினிமாவில் பல ஜானர்களில் படங்கள் வந்த வண்ணமுள்ளது. தமிழ் சினிமாவில் ஹாரர், ஆக்ஷன், த்ரில்லர், காமெடி, ரொமாண்டிக், சைன்ஸ்-ஃபிக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, அடல்ட் காமெடி போன்ற ஜானர்களில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இப்போது பிரபல திரைப்பட ரேட்டிங் தளமான ‘IMDB’, அதிக ரேட்டிங் பெற்ற டாப் 10 தமிழ் படங்களின் லிஸ்ட்டை வெளியிட்டுள்ளது. அந்த டாப் 10 லிஸ்ட் இதோ…
1. ராட்சசன் (8.5/10) :
2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘ராட்சசன்’. இந்த படத்தை இயக்குநர் ராம் குமார் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் அமலா பால், ராம்தாஸ், காளி வெங்கட், சரவணன், அபிராமி, வினோதினி வைத்யநாதன், நிழல்கள் ரவி, ராதாரவி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
2. விக்ரம் வேதா (8.5/10) :
2017-ஆம் ஆண்டு வெளியான படம் ‘விக்ரம் வேதா’. இந்த படத்தை இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி இணைந்து இயக்கியிருந்தார்கள். இதில் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – மாதவன் இணைந்து நடித்திருந்தார்கள். மேலும், முக்கிய ரோல்களில் வரலக்ஷ்மி சரத்குமார், கதிர், ஷ்ரதா ஸ்ரீநாத், பிரேம், அச்யுத் குமார், மணிகண்டன், ஹரீஷ் பெராடி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
3. நாயகன் (8.5/10) :
1987-ஆம் ஆண்டு வெளியான படம் ‘நாயகன்’. இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் சரண்யா பொன்வண்ணன், கார்த்திகா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், டின்னு ஆனந்த், நிழல்கள் ரவி, நாசர், விஜயன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
4. அன்பே சிவம் (8.4/10) :
2003-ஆம் ஆண்டு வெளியான படம் ‘அன்பே சிவம்’. இந்த படத்தை இயக்குநர் சுந்தர்.சி இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் மாதவன், கிரண், நாசர், சந்தான பாரதி, சீமா, யூகி சேது, உமா ரியாஸ் கான் மற்றும் பலர் நடித்திருந்தனர்.
5. பரியேறும் பெருமாள் (8.4/10) :
2018-ஆம் ஆண்டு வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த படத்தை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக கதிர் நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் ‘கயல்’ ஆனந்தி, யோகி பாபு, ஜி.மாரிமுத்து, சண்முகராஜன், லிஜீஷ், லிஸ்ஸி ஆண்டனி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
6. தேவர் மகன் (8.4/10) :
1992-ஆம் ஆண்டு வெளியான படம் ‘தேவர் மகன்’. இந்த படத்தை இயக்குநர் பரதன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘உலக நாயகன்’ கமல்ஹாசன் நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் சிவாஜி கணேசன், ரேவதி, கௌதமி, நாசர், சங்கிலி முருகன், வடிவேலு, தலைவாசல் விஜய், காந்திமதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
7. 96 (8.4/10) :
2018-ஆம் ஆண்டு வெளியான படம் ’96’. இந்த படத்தை இயக்குநர் சி.பிரேம் குமார் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் த்ரிஷா, பகவதி பெருமாள், ஜனகராஜ், கௌரி.ஜி.கிஷன், ஆதித்யா பாஸ்கர், தேவதர்ஷினி, ராஜ்குமார், ஆடுகளம் முருகதாஸ், வர்ஷா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
8. விசாரணை (8.3/10) :
2015-ஆம் ஆண்டு வெளியான படம் ‘விசாரணை’. இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் ‘கயல்’ ஆனந்தி, ஆடுகளம் முருகதாஸ், சமுத்திரக்கனி, கிஷோர், மிஸா கோஷல், சரவண சுப்பையா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
9. தளபதி (8.3/10) :
1991-ஆம் ஆண்டு வெளியான படம் ‘தளபதி’. இந்த படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் மம்மூட்டி, அரவிந்த் சாமி, ஜெய்ஷங்கர், ஸ்ரீவித்யா, அம்ரிஷ் பூரி, பானுப்ரியா, ஷோபனா, கீதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
10. அசுரன் (8.3/10) :
2019-ஆம் ஆண்டு வெளியான படம் ‘அசுரன்’. இந்த படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்கியிருந்தார். இதில் ஹீரோவாக தனுஷ் நடித்திருந்தார். மேலும், முக்கிய ரோல்களில் பசுபதி, மஞ்சு வாரியர், டிஜே அருணாச்சலம், கென் கருணாஸ், பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி, பாலாஜி சக்திவேல், ஏ.வெங்கடேஷ், பவன், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடித்திருந்தனர்.