ரஜினி டு விஜய் சேதுபதி… முன்னணி ஹீரோக்களின் டிராப்பான படங்களின் லிஸ்ட்!

  • July 8, 2021 / 12:05 AM IST

சினிமாவில் டாப் ஹீரோக்களின் படங்களுக்கு எப்போதுமே மிகப் பெரிய எக்ஸ்பெக்டேஷன் இருக்கும். அதுவும் அப்படத்தை இயக்கப்போவது டாப் இயக்குநர்களில் ஒருவர் என்றால் கேட்கவே தேவையில்லை, எக்ஸ்பெக்டேஷன் லெவல் இன்னும் கூடுதலாக தான் இருக்கும். சில ஹீரோக்கள் – இயக்குநர்கள் காம்போவில் ஆரம்பிக்கப்பட்டு, பின் பல்வேறு காரணங்களால் டிராப்பான தமிழ் படங்கள் ஏராளம். அப்படி டிராப்பான படங்களின் லிஸ்ட் இதோ..

1.ரஜினிகாந்த் :

முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் இப்போது ‘அண்ணாத்த’-யில் நடித்து வருகிறார். இந்த படத்தை சிவா இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து கொண்டிருக்கிறது. ரஜினி நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட ‘ராணா’ (இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார்), ‘ஜக்குபாய்’ (இயக்கம் : கே.எஸ்.ரவிக்குமார்), ‘சுல்தான் தி வாரியர்’ (இயக்கம் : சௌந்தர்யா ரஜினிகாந்த்) ஆகிய படங்கள் பல்வேறு காரணங்களால் டிராப்பானது.

2.கமல் ஹாசன் :

முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் இப்போது ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. கமல் நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட ‘மருதநாயகம்’ (இயக்கம் : கமல் ஹாசன்), ‘மர்மயோகி’ (இயக்கம் : கமல் ஹாசன்), ‘சபாஷ் நாயுடு’ (இயக்கம் : கமல் ஹாசன்) ஆகிய படங்கள் பல்வேறு காரணங்களால் டிராப்பானது.

3.விஜய் :

முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ‘தளபதி’ விஜய் இப்போது நெல்சன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து கொண்டிருக்கிறது. விஜய் நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட ‘யோஹன் : அத்தியாயம் ஒன்று’ (இயக்கம் : கெளதம் மேனன்), ‘பகலவன்’ (இயக்கம் : சீமான்) ஆகிய படங்கள் பல்வேறு காரணங்களால் டிராப்பானது.

4.அஜித் :

முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ‘தல’ அஜித் இப்போது ஹெச்.வினோத் இயக்கும் ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை போனி கபூர் தயாரித்து கொண்டிருக்கிறார். அஜித் நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட ‘மிரட்டல்’ (இயக்கம் : ஏ.ஆர்.முருகதாஸ்), ‘மகா’ (இயக்கம் : ஏ.பி.ரவிராதா), ‘இதிகாசம்’ (இயக்கம் : சரவண சுப்பையா) ஆகிய படங்கள் பல்வேறு காரணங்களால் டிராப்பானது.

5.சூர்யா :

முன்னணி ஹீரோக்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் இப்போது கெளதம் மேனன் இயக்கும் ‘நவரசா’ வெப் சீரிஸ் மற்றும் வெற்றிமாறன் இயக்கும் ‘வாடிவாசல்’, பாண்டிராஜ் இயக்கும் ‘சூர்யா 40’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சூர்யா நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட ‘சென்னையில் ஒரு மழைக்காலம்’ (இயக்கம் : கெளதம் மேனன்), ‘அருவா’ (இயக்கம் : ஹரி) ஆகிய படங்கள் பல்வேறு காரணங்களால் டிராப்பானது.

6.சிலம்பரசன் :

பாப்புலர் ஹீரோக்களில் ஒருவரான சிலம்பரசன் நடிப்பில் இப்போது ‘மாநாடு, மஹா, பத்து தல, நதிகளிலே நீராடும் சூரியன்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. சிலம்பரசன் நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட ‘கெட்டவன்’ (இயக்கம் : ஜி.டி.நந்து), ‘AC’ (இயக்கம் : எஸ்.ஜே.சூர்யா), ‘கான்’ (இயக்கம் : செல்வராகவன்), ‘வேட்டை மன்னன்’ (இயக்கம் : நெல்சன்), ‘வாலிபன்’ (இயக்கம் : சிலம்பரசன்) ஆகிய படங்கள் பல்வேறு காரணங்களால் டிராப்பானது.

7.விக்ரம் :

முன்னணி ஹீரோக்களில் ஒருவரான விக்ரம் நடிப்பில் இப்போது ‘கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன்’ மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் படம் என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. விக்ரம் நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட ‘கரிகாலன்’ (இயக்கம் : கண்ணன்), ‘மஹாவீர் கர்ணா’ (இயக்கம் : ஆர்.எஸ்.விமல்) ஆகிய படங்கள் பல்வேறு காரணங்களால் டிராப்பானது.

8.தனுஷ் :

முன்னணி ஹீரோக்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் இப்போது ‘ஜகமே தந்திரம், நானே வருவேன், ஆயிரத்தில் ஒருவன் 2’, இயக்குநர்கள் கார்த்திக் நரேன், ராம் குமார், வெற்றி மாறன், மித்ரன்.ஆர்.ஜவஹர், மாரி செல்வராஜ், பாலாஜி மோகன் படங்கள், ஹிந்தியில் ‘அட்ராங்கி ரே’ மற்றும் ஹாலிவுட்டில் ‘தி க்ரே மேன்’ என 11 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. தனுஷ் நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட ‘திருடன் போலீஸ்’ (இயக்கம் : அர்விந்த் கிருஷ்ணா), ‘சூதாடி’ (இயக்கம் : வெற்றிமாறன்), ‘டாக்டர்ஸ்’ (இயக்கம் : செல்வராகவன்) ஆகிய படங்கள் பல்வேறு காரணங்களால் டிராப்பானது.

9.விஜய் சேதுபதி :

முன்னணி ஹீரோக்களில் ஒருவரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் இப்போது 13 படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட ‘சங்குத்தேவன்’ (இயக்கம் : சுதாகர்), ‘வசந்தகுமாரன்’ (இயக்கம் : ஆனந்த் குமரேசன்), ‘800’ (இயக்கம் : எம்.எஸ்.ஸ்ரீபதி) ஆகிய படங்கள் பல்வேறு காரணங்களால் டிராப்பானது.

10.விஷ்ணு விஷால் :

பாப்புலர் ஹீரோக்களில் ஒருவரான விஷ்ணு விஷால் நடிப்பில் இப்போது ‘மோகன்தாஸ், FIR, ஜகஜால கில்லாடி, இன்று நேற்று நாளை 2’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. விஷ்ணு விஷால் நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட ‘வீரதீரசூரன்’ (இயக்கம் : ஷங்கர் தயாள்) என்ற படம் பல்வேறு காரணங்களால் டிராப்பானது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus