சினிமாவில் பல ஜானர்களில் படங்கள் வந்த வண்ணமுள்ளது. தமிழ் சினிமாவில் ஹாரர், ஆக்ஷன், த்ரில்லர், காமெடி, ரொமாண்டிக், சைன்ஸ்-ஃபிக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி, அடல்ட் காமெடி போன்ற ஜானர்களில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இதில் அடல்ட் காமெடி ஜானரில் குறைவான படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கிறது. தற்போது, தமிழில் உருவாகி கொண்டிருக்கும் அடல்ட் காமெடி ஜானர் படங்களின் லிஸ்ட் இதோ…
1. இருட்டு அறையில் முரட்டு குத்து 2 :
இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கி, ஹீரோவாக நடித்து வரும் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’. இதில் முக்கிய ரோல்களில் கரீஷ்மா, ஆக்ருதி, மீனாள், ஷாலு ஷம்மு, ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
2. முருங்கக்காய் :
இயக்குநர் ஆர்.எஸ்.மணி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘முருங்கக்காய்’. இந்த படத்தில் ஹீரோவாக ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் மாரிமுத்து, தமிழ்ச் செல்வி மற்றும் பலர் நடிக்கின்றனர்.
3. பல்லு படாம பாத்துக்க :
இயக்குநர் விஜய் வரதராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பல்லு படாம பாத்துக்க’. இந்த படத்தில் ஹீரோவாக ‘அட்டகத்தி’ தினேஷ் நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் சஞ்சிதா ஷெட்டி, ஷாரா, மொட்ட ராஜேந்திரன், ஜெகன், லிங்கா, சாய் தீனா, ஹரீஷ் பெராடி, ரிஷிகாந்த், ஜி.எம்.குமார், ஆனந்த் பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.
4. முருங்கைகாய் சிப்ஸ் :
இயக்குநர் ஸ்ரீஜர் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘முருங்கைகாய் சிப்ஸ்’. இந்த படத்தில் ஹீரோவாக ஷாந்தனு நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் அதுல்யா ரவி, கே.பாக்யராஜ், யோகி பாபு, மனோபாலா, ரேஷ்மா, ஜாங்கிரி மதுமிதா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.
When meeting someone new, discuss personal boundaries and expectations through datempire conversations before arranging a date.