தனுஷ் டு ஜி.வி.பிரகாஷ் குமார்… தமிழில் உருவாகும் ஃபேண்டசி படங்கள்!
August 5, 2020 / 01:48 PM IST
|Follow Us
சினிமாவில் பல ஜானர்களில் படங்கள் வந்த வண்ணமுள்ளது. தமிழ் சினிமாவில் ஹாரர், ஆக்ஷன், த்ரில்லர், காமெடி, ரொமாண்டிக், சைன்ஸ்- ஃபிக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி போன்ற ஜானர்களில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இதில் ஃபேண்டசி ஜானரில் குறைவான படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கிறது. தற்போது, தமிழில் உருவாகி கொண்டிருக்கும் ஃபேண்டசி ஜானர் படங்களின் லிஸ்ட் இதோ…
1. க் :
இயக்குநர் பாபு தமிழ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘க்’. இந்த படத்தில் ஹீரோவாக யோகேஷ் நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் குரு சோமசுந்தரம், அணிகா விக்ரமன், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
2. 4ஜி :
மறைந்த இயக்குநர் வெங்கட் பாக்கர் இயக்கியுள்ள படம் ‘4ஜி’. இந்த படத்தில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் காயத்ரி சுரேஷ், சதீஷ், சுரேஷ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
3. சிண்ட்ரெல்லா :
இயக்குநர் வினூ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சிண்ட்ரெல்லா’. இந்த படத்தில் ஹீரோயினாக ராய் லக்ஷ்மி நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் சாக்ஷி அகர்வால், கல்லூரி வினோத், ரோபோ ஷங்கர், ஆடுகளம் நரேன், அன்பு தாசன், பாய்ஸ் ராஜன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
4. ஆலம்பனா :
இயக்குநர் பாரி.கே.விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆலம்பனா’. இந்த படத்தில் ஹீரோவாக வைபவ் நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் பார்வதி நாயர், ராம்தாஸ், திண்டுக்கல் லியோனி, ஆனந்த ராஜ், முரளி ஷர்மா, காளி வெங்கட், கபீர் துகான் சிங் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
5. தனுஷின் புதிய படம் :
இயக்குநர் ராம்குமார் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் ஹீரோவாக தனுஷ் நடிக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளது.
6. பிக் பாஸ் :
இயக்குநர் கிருஷ்ணன் ஜெயராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘பிக் பாஸ்’. இந்த படத்தில் ஹீரோயினாக அஞ்சலி நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் ரேஷ்மா, ராமர், யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.