ஜி.வி.பிரகாஷ் குமார் டு எஸ்.ஜே.சூர்யா… தமிழில் உருவாகும் ஹாரர் படங்கள்!

  • August 8, 2020 / 03:37 PM IST

சினிமாவில் பல ஜானர்களில் படங்கள் வந்த வண்ணமுள்ளது. தமிழ் சினிமாவில் ஹாரர், ஆக்ஷன், த்ரில்லர், காமெடி, ரொமாண்டிக், சைன்ஸ்-ஃபிக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி போன்ற ஜானர்களில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இதில் ஹாரர் ஜானரில் வரும் படங்களுக்கு எப்பவுமே ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். தற்போது, தமிழில் உருவாகி கொண்டிருக்கும் ஹாரர் ஜானர் படங்களின் லிஸ்ட் இதோ…

1. ஆயிரம் ஜென்மங்கள் :

இயக்குநர் எஸ்.எழில் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஆயிரம் ஜென்மங்கள்’. இந்த படத்தில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வருகிறார். மேலும், முக்கிய ரோல்களில் ஈஷா ரெப்பா, நிகிஷா பட்டேல், சாக்ஷி அகர்வால், சதீஷ், ஜாங்கிரி மதுமிதா, மொட்ட ராஜேந்திரன், ஆனந்த ராஜ், சாம்ஸ், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

2. அரண்மனை 3 :

இயக்குநர் சுந்தர்.சி இயக்கி, நடிக்கும் படம் ‘அரண்மனை 3’. இந்த படத்தில் ஹீரோவாக ஆர்யா நடித்து வருகிறார். மேலும், முக்கிய ரோல்களில் ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

3. சந்திரமுகி 2 :

இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் உருவாகவிருக்கும் படம் ‘சந்திரமுகி 2’. இந்த படத்தில் ஹீரோவாக ராகவா லாரன்ஸ் நடிக்க உள்ளார். இதனை கலாநிதி மாறன் தனது ‘சன் பிக்சர்ஸ்’ மூலம் மெகா பட்ஜெட்டில் தயாரிக்கவிருக்கிறார்.

4. காட்டேரி :

இயக்குநர் டிகே இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காட்டேரி’. இந்த படத்தில் ஹீரோவாக வைபவ் நடித்து வருகிறார். மேலும், முக்கிய ரோல்களில் வரலக்ஷ்மி சரத்குமார், சோனம் பாஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோட், பொன்னம்பலம், கருணாகரன், மொட்ட ராஜேந்திரன், ரவி மரியா, மைம் கோபி, ஜான் விஜய் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

5. ஊமை விழிகள் :

இயக்குநர் VS இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஊமை விழிகள்’. இந்த படத்தில் ஹீரோவாக பிரபு தேவா நடித்து வருகிறார். மேலும், முக்கிய ரோல்களில் மம்தா மோகன்தாஸ், ரோஷன், வினோதினி வைத்யநாதன், ஹரீஷ் பெராடி, ஜெயபிரகாஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

6. சிண்ட்ரெல்லா :

இயக்குநர் வினூ வெங்கடேஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘சிண்ட்ரெல்லா’. இந்த படத்தில் ஹீரோயினாக ராய் லக்ஷ்மி நடிக்கிறார். மேலும், முக்கிய ரோல்களில் சாக்ஷி அகர்வால், கல்லூரி வினோத், ரோபோ ஷங்கர், ஆடுகளம் நரேன், அன்பு தாசன், பாய்ஸ் ராஜன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

7. காதலிக்க யாருமில்லை :

இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘காதலிக்க யாருமில்லை’. இந்த படத்தில் ஹீரோவாக ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து வருகிறார். மேலும், முக்கிய ரோல்களில் ரைசா வில்சன், குரு சோமசுந்தரம், யோகி பாபு, ஷாரா, ஆனந்த ராஜ், கௌசல்யா மற்றும் பலர் நடிக்கின்றனர்.

8. இருட்டு அறையில் முரட்டு குத்து 2 :

இயக்குநர் சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கி, ஹீரோவாக நடித்து வரும் படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து 2’. இதில் முக்கிய ரோல்களில் கரீஷ்மா, ஆக்ருதி, மீனாள், ஷாலு ஷம்மு, ரவி மரியா, சாம்ஸ், மொட்ட ராஜேந்திரன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.

9. ஒ :

இயக்குநர் பிரவீன் பிக்காட் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஒ’. இந்த படத்தில் ஹீரோயினாக அஞ்சலி நடித்து வருகிறார். அஜய் பணிக்கர் தனது ‘AJ ஃபிலிம்ஸ்’ மூலம் தயாரிக்கும் இப்படத்துக்கு அரோல் கொரேலி இசையமைத்து வருகிறார்.

10. நெஞ்சம் மறப்பதில்லை :

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘நெஞ்சம் மறப்பதில்லை’. இந்த படத்தில் ஹீரோவாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். மேலும், முக்கிய ரோல்களில் நந்திதா ஸ்வேதா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus