சினிமாவில் பல ஜானர்களில் படங்கள் வந்த வண்ணமுள்ளது. தமிழ் சினிமாவில் ஹாரர், ஆக்ஷன், த்ரில்லர், காமெடி, ரொமாண்டிக், சைன்ஸ்-ஃபிக்ஷன், அட்வெஞ்சர், ஃபேண்டசி போன்ற ஜானர்களில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இதில் சைன்ஸ்-ஃபிக்ஷன் ஜானரில் குறைவான படங்கள் மட்டுமே வெளியாகியிருக்கிறது. தற்போது, தமிழில் உருவாகி கொண்டிருக்கும் சைன்ஸ்-ஃபிக்ஷன் ஜானர் படங்களின் லிஸ்ட் இதோ…
1. அயலான் :
இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘அயலான்’. இந்த படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். மேலும், முக்கிய ரோல்களில் ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், ஷரத் கெல்கர், யோகி பாபு, கருணாகரன், பானுப்ரியா, பால சரவணன் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
2. ஜாங்கோ :
இயக்குநர் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘ஜாங்கோ’. இந்த படத்தில் ஹீரோவாக சதீஷ் குமார் நடித்து வருகிறார். மேலும், முக்கிய ரோல்களில் மிருணாளினி ரவி, கருணாகரன், ஹரீஷ் பெராடி, ராம்தாஸ் மற்றும் பலர் நடிக்கின்றனர்.
3. Dr.56 :
இயக்குநர் ராஜேஷ் ஆனந்தலீலா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘Dr.56’. இந்த படத்தில் ஹீரோவாக பிரவீன் ரெட்டி நடித்து வருகிறார். இப்படம் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் ரெடியாகுகிறது.
4. பிரபாஸ் 21 :
இயக்குநர் நாக் அஷ்வின் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடிக்க உள்ளார். இந்த படம் நடிகர் பிரபாஸின் கேரியரில் 21-வது படமாம். இதில் பிரபாஸுக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடிக்கவிருக்கிறார். இப்படம் தெலுங்கு, ஹிந்தி, தமிழ் என மூன்று மொழிகளில் உருவாகவிருக்கிறது.
5. ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 ரீமேக் :
மலையாளத்தில் ஹிட்டான ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ படம் தமிழில் ரீமேக்காகப்போகிறது. இதில் ஹீரோவாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை கே.எஸ்.ரவிக்குமாரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்ற ஒருவர் தான் இயக்க உள்ளாராம்.
6. இன்று நேற்று நாளை 2 :
இயக்குநர் எஸ்.பி.கார்த்தி இயக்கத்தில் உருவாகவிருக்கும் படம் ‘இன்று நேற்று நாளை 2’. இந்த படத்தில் ஹீரோவாக விஷ்ணு விஷால் நடிக்கவுள்ளார். மேலும், முக்கிய ரோலில் கருணாகரன் நடிக்கவுள்ளார்.