கமல் டு விஷால்… தமிழில் தயாராகும் சீக்குவல் படங்கள்!

  • July 25, 2020 / 08:04 PM IST

தமிழ் திரையுலகில் ஒரு படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானால், அடுத்ததாக அந்த நடிகரின் படத்துக்கோ அல்லது அந்த படத்தை இயக்கிய இயக்குநரின் படத்துக்கோ ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். அதைவிட பல மடங்கு எக்ஸ்பெக்டேஷன், அதே படத்தின் சீக்குவல் உருவாகும்போது ரசிகர்களுக்கு இருக்கும். தற்போது, தமிழில் தயாராகி கொண்டிருக்கும் சீக்குவல் படங்களின் லிஸ்ட் இதோ…

1. இந்தியன் 2 :

1996-யில் வெளியாகி ஹிட்டான படம் ‘இந்தியன்’. இப்போது பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் – ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் காம்போவில் இதன் பார்ட் 2 பரபாரப்பாக ரெடியாகி கொண்டிருக்கிறது. இதில் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், ப்ரியா பவானி ஷங்கர் என பல பிரபலங்கள் முக்கிய ரோல்களில் நடிக்கின்றனர்.

2. பிச்சைக்காரன் 2 :

2016-யில் நடிகர் விஜய் ஆண்டனி – இயக்குநர் சசி கூட்டணியில் வெளியாகி ஹிட்டான படம் ‘பிச்சைக்காரன்’. இப்போது விஜய் ஆண்டனி ‘பிச்சைக்காரன்’ பார்ட் 2-வில் நடிக்கவிருக்கிறார். இந்த படத்தை பெண் இயக்குநர் ப்ரியா கிருஷ்ணசுவாமி இயக்கவிருக்கிறார்.

3. அரண்மனை 3 :

2014-யில் சுந்தர்.சி இயக்கி, நடித்த ‘அரண்மனை’-க்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால், அதன் பார்ட் 2-வை 2016-யில் எடுத்தார். இதுவும் ஹிட்டாக, இப்போது ‘அரண்மனை’ பார்ட் 3-யை இயக்கி வருகிறார் சுந்தர்.சி. இதில் ஆர்யா, ராஷி கண்ணா ஜோடியாக நடிக்கின்றனர்.

4. தேவர் மகன் 2 – தலைவன் இருக்கின்றான் :

1992-யில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் – இயக்குநர் பரதன் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான படம் ‘தேவர் மகன்’. இப்போது இந்த படத்தின் பார்ட் 2 ‘தலைவன் இருக்கின்றான்’ என்ற டைட்டிலில் உருவாகவிருக்கிறது. இப்படத்தை கமல் ஹாசனே இயக்கி, நடிக்கவுள்ளார்.

5. துப்பறிவாளன் 2:

2017-யில் நடிகர் விஷால் – இயக்குநர் மிஷ்கின் கூட்டணியில் வெளியாகி ஹிட்டான படம் ‘துப்பறிவாளன்’. இப்போது இந்த படத்தின் பார்ட் 2 உருவாகி கொண்டிருக்கிறது. விஷால் – மிஷ்கின் இணைந்தே இந்த படத்திலும் பணியாற்றி வந்தனர். பின், சில கருத்து வேறுபாடு காரணமாக மிஷ்கின் விலகிக் கொண்டார். அதன் பிறகு விஷாலே பேலன்ஸ் படத்தை இயக்கி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus