‘தளபதி’ விஜய்-க்கு லிப் லாக் முத்தம் கொடுத்த ஹீரோயின்களின் லிஸ்ட்!

சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் ‘தளபதி’ விஜய். பிரபல இயக்குநரும், நடிகருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் மகனாக இருக்கும் விஜய், திரையுலகில் தனக்கென ஒரு ஃபார்முலாவை பிடித்து தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் ‘வெற்றி, குடும்பம், வசந்த ராகம், சட்டம் ஒரு விளையாட்டு, இது எங்கள் நீதி’ போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார் விஜய். அதன் பிறகு விஜய் கதையின் நாயகனாக அவதாரம் எடுத்த படம் ‘நாளைய தீர்ப்பு’.

இந்த படத்துக்கு பிறகு நடிகர் விஜய்-க்கு அடித்தது ஜாக்பாட். அடுத்தடுத்து இவரின் கால்ஷீட் டைரியில் ‘செந்தூரபாண்டி, ரசிகன், தேவா, ராஜாவின் பார்வையிலே, விஷ்ணு, சந்திரலேகா, கோயமுத்தூர் மாப்ளே, பூவே உனக்காக, வசந்த வாசல், மாண்புமிகு மாணவன், செல்வா, காலமெல்லாம் காத்திருப்பேன், லவ் டுடே, ஒன்ஸ்மோர், நேருக்கு நேர், காதலுக்கு மரியாதை, நினைத்தேன் வந்தாய், ப்ரியமுடன், நிலவே வா, துள்ளாத மனமும் துள்ளும், என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சார கண்ணா, கண்ணுக்குள் நிலவு, குஷி, ப்ரியமானவளே, ப்ரண்ட்ஸ், பத்ரி, ஷாஜகான், தமிழன், யூத், பகவதி, வசீகரா, புதிய கீதை, திருமலை, உதயா, கில்லி, மதுர, திருப்பாச்சி, சச்சின், சிவகாசி, ஆதி, போக்கிரி, அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு, வேட்டைக்காரன், சுறா, காவலன், வேலாயுதம், நண்பன், துப்பாக்கி, தலைவா, ஜில்லா, கத்தி, புலி, தெறி, பைரவா, மெர்சல், சர்கார், பிகில், மாஸ்டர்’ என தமிழ் படங்கள் குவிந்தது.

1999-ஆம் ஆண்டு விஜய்யின் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. விஜய், சங்கீதா தம்பதியினருக்கு ஜேசன் சஞ்சய் என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். இப்போது, விஜய்யின் புதிய படமான ‘பீஸ்ட்’-ஐ நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரித்து வருகிறது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைத்து வருகிறார், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதில் விஜய்-க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

‘பீஸ்ட்’-ஐ தொடர்ந்து விஜய்-யின் 66-வது படத்தை ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தில் ராஜு தயாரிக்க உள்ளார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாக உள்ள இப்படத்தினை ‘தோழா’ படம் மூலம் ஃபேமஸான இயக்குநர் வம்சி இயக்க உள்ளார். நடிகர் விஜய் நடித்ததில் சில படங்களில் மட்டும் லிப் லாக் முத்தக் காட்சிகள் இருக்கும். திரைப்படங்களில் விஜய்-க்கு லிப் லாக் முத்தம் கொடுத்த ஹீரோயின்களின் லிஸ்ட் இதோ…

1.தெறி – சமந்தா

2.நண்பன் – இலியானா

3.வேட்டைக்காரன் – அனுஷ்கா ஷெட்டி

4.வில்லு – நயன்தாரா

5.அழகிய தமிழ்மகன் – ஸ்ரேயா சரண்

6.குஷி – ஜோதிகா

7.கோயமுத்தூர் மாப்ளே – சங்கவி

Share.