ரசிகர்களுக்கு அறிவுரை கூறிய லோகேஷ் கனகராஜ் !

  • January 13, 2023 / 12:13 PM IST

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் விக்ரம் .இந்த படத்தில் நடிகர் கமல்ஹாசன் நாயகனாக நடித்து இருந்தார் . மேலும் இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர் . நடிகர் சூர்யா இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்து இருந்தார் .‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி இருந்தது . இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார் .

இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் அடுத்து இயக்க உள்ள படங்கள் பற்றி காண்போம் . லோகேஷ் கனகராஜ் இப்போது பணியாற்ற உள்ள படம் தளபதி 67 . நடிகர் விஜய் நடிக்கும் இந்த படத்தை லலித் தயாரிக்க உள்ளார் . இந்த படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது .

இது ஒரு பக்கம் இருக்கு சமிபத்தில் துணிவு படம் வெளியான போது ரசிகர் ஒருவர் மரணம் அடைந்தார் .இது குறித்து பேசிய லோகேஷ் கனகராஜ் ” சினிமா என்பது பொழுதுபோக்கானது மட்டுமே . உயிரை விடும் அளவிற்கு அதற்கு முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை .. “சந்தோஷமாகச் சென்று படம் பார்த்துவிட்டு வீடு திரும்பினாலே போதும். உயிர் போகும் அளவிற்கு கொண்டாட்டங்கள் தேவையில்லை!” என்று கூறியுள்ளார் .

சமீபத்தில் உயிரிழந்த ரசிகருக்கு நடிகர் அஜித் உட்பட எந்த ஒரு முன்னணி நடிகரும் இரங்கல் தெரிவிக்கவில்லை . இதன் மூலம் ரசிகர்களின் மீது இவர்களுக்கு எந்த ஒரு அக்கறையும் இல்லை தெள்ள தெளிவாக தெரிகிறது . மேலும் இவர்களுக்கு மனசாட்சி இருக்கிறது என்ற கேள்வியும் பொது மக்களிடம் எழுந்து உள்ளது .

மேலும் சினிமாவை வெறும் சினிமா தான் என்று இளைஞர்கள் நம்ப தொடங்குகிறார்களோ அன்று முன்னணி நட்சத்திரங்கள் ஒளிர முடியாமல் மங்கி போவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus