விக்ரம் கதையை திருட முடியாது !

  • April 25, 2022 / 06:06 PM IST

மாநகரம் , கைதி , மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கியவர் நடிகர் லோகேஷ் கனகராஜ். இவர் தற்பொழுது நடிகர் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி வருகிறார் .இந்த படத்தில் நடிகர்கள் பஹத் பாசில், விஜய் சேதுபதி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‛விக்ரம்’ படம் அதிரடி ஆக்சன் கதையில் தயாராகி உள்ளது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. விக்ரம் படத்தை ஜூன் 3ம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.


இந்த நிலையில் விக்ரம் படத்தின் கதை , திரைக்கதை , வசனம் அடங்கிய ஸ்கிரிப்டை இந்திய காப்புரிமை சட்டத்தின் கீழ் முறைப்படி பதிவு செய்து விட்டார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் . அதனால் இந்த படத்தின் கதை எனது கதை என்று யாரும் வழக்கு தொடர முடியாது , படத்தின் கதையையோ , காட்சியையோ யாரும் காப்பி அடிக்கவும் முடியாது . மேலும் இதனால் திருட்டு புகாரும் இந்த கதை மீது தர முடியாது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது .

இந்நிலையில் படக்குழுவினர் படத்தை விளம்பரப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இருந்தனர் . படத்துக்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது . மேலும் இந்த படம் பேன் இந்திய படமாக உருவாக உள்ளது .

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus