2008 ஆம் ஆண்டு வெளியான “சக்கரக்கட்டி” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகமானவர் சாந்தனு பாக்கியராஜ். பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜின் மகனான இவர், கடைசியாக “வானம் கொட்டட்டும்” படத்தில் நடித்திருந்தார்.
இவர் கிகி விஜய்யை திருமணம் செய்துகொண்டார். இந்த லாக்டவுனில் தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் சாந்தனு பாக்கியராஜ், தன் மனைவியுடன் சேர்ந்து குறும்படம் ஒன்றை வெளியிட்டார்.
இந்த குறும்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான சிங்கிள் பாடலொன்றில் நடிகர் கலையரசன் மற்றும் மேகா ஆகாஷ் ஆகியோருடன் சேர்ந்து இவர் நடனமாடியிருந்தார்.
சமீபத்தில் அவர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “இராவண கோட்டம்” திரைப்படத்தில் நடித்திருக்கும் செய்தியை வெளியிட்டு, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை லோகேஷ் கனகராஜ் விரைவில் வெளியிடுவார் என்று குறிப்பிட்டிருந்தார்.
தற்போது லோகேஷ் கனகராஜ் “இராவண கோட்டம்” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படத்தை கண்ணன் ரவி தயாரித்துள்ளார். மேலும் நடிகர் சாந்தனுவுக்கு ஜோடியாக ஆனந்தி நடித்துள்ளார்.
தற்போது இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ் “சாந்தனு வாழ்த்துக்கள். இனிமேல் உன் வாழ்வில் அனைத்துமே நல்லதாகவே நடக்கும்.விக்ரம் சுகுமாரன் ப்ரோ வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள் தயாரிப்பாளர் கண்ணன்ரவி சார், ஆனந்தி, இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன், எடிட்டர் கிஷோர் மற்றும் கோபி பிரசன்னா” என்று குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/Dir_Lokesh/status/1291698667867578371?s=19
https://twitter.com/imKBRshanthnu/status/1291699870072320000?s=19
நடிகர் சாந்தனு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவரவிருக்கும் “மாஸ்டர்” திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ஸ்ரிஜர் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் “முருங்கைக்காய் சிப்ஸ்” படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தில் அதுல்யா ரவி, பாக்யராஜ், யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர்.