“ஆரம்பிக்கலாங்களா”… கமலின் ‘விக்ரம்’ தொடர்பாக லோகேஷ் கனகராஜ் போட்ட மாஸ் ட்வீட்!

  • April 7, 2021 / 02:02 PM IST

விஜய் டிவியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ ரியாலிட்டி ஷோவின் சீசன் 4 கடந்த ஆண்டு (2020) அக்டோபர் 4-ஆம் தேதி முதல் துவங்கி இந்த ஆண்டு (2021) ஜனவரி 17-ஆம் தேதி வரை ஒளிபரப்பானது. இப்போது, ‘உலக நாயகன்’ கமல் ஹாசன் நடிப்பில் ஷங்கரின் ‘இந்தியன் 2’, லோகேஷ் கனகராஜின் ‘விக்ரம்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘விக்ரம்’ படத்தின் ஷூட்டிங் விரைவில் ஆரம்பமாகப்போகிறது. அதற்கான வேலைகள் ஜெட் ஸ்பீடில் நடைபெற்று கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு ரிலீஸ் செய்யப்பட்ட ‘விக்ரம்’ டீசர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. பொலிட்டிக்கல் ஆக்ஷன் த்ரில்லர் படமான இதில் மலையாள சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவரான ஃபஹத் ஃபாசில் பவர்ஃபுல்லான வில்லன் ரோல் நடிக்க உள்ளார்.

தற்போது, லோகேஷ் கனகராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘உலக நாயகன்’ கமல் ஹாசனுடன் எடுத்துக்கொண்ட ஒரு ஸ்டில்லை வெளியிட்டுள்ளார். மேலும், இப்படத்தின் டீசரில் வந்த “ஆரம்பிக்கலாங்களா” என்ற வசனத்தையும் ஸ்டேட்டஸாகத் தட்டியுள்ளார் லோகேஷ். இந்த ஸ்டில் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus