Fight Club : லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் விஜய் குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’… வெளியானது மிரட்டலான ஃபர்ஸ்ட் லுக்!

  • November 29, 2023 / 07:47 PM IST

தமிழ் சினிமாவில் டாப் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் லோகேஷ் கனகராஜ். இவர் ‘மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கினார்.

சமீபத்தில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ‘G SQUAD’ என்ற பெயரில் புதிய தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்துள்ளதாக அறிவித்தார். தற்போது, அவரின் முதல் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘ஃபைட் கிளப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இதில் ஹீரோவாக ‘உறியடி’ புகழ் விஜய் குமார் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குநர் அப்பாஸ்.ஏ.ரஹ்மத் இயக்கியுள்ளார். இதற்கு கோவிந்த் வஸந்தா இசையமைத்துள்ளார், லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவு செய்துள்ளார், கிருபாகரன் படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். படத்தை வருகிற டிசம்பர் மாதம் ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus