2016-ஆம் ஆண்டு தமிழில் வெளியான ஆந்தாலஜி படம் ‘அவியல்’. இதில் ‘களம்’ என்ற கதையை மட்டும் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். அதன் பிறகு லோகேஷ் இயக்கிய படம் ‘மாநகரம்’. ஹைப்பர் லிங்க் படமான இதில் சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா கசாண்ட்ரா, சார்லி மற்றும் பலர் நடித்திருந்தனர். இந்த படம் சூப்பர் ஹிட்டானதும், லோகேஷுக்கு அடித்தது ஜாக்பாட். அடுத்ததாக கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற படத்தினை இயக்கினார்.
ஆக்ஷன் த்ரில்லர் படமான இது கடந்த 2019-யில் தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இப்படம் ரிலீஸாவதற்கு முன்பே, விஜய்க்கு கதை சொல்லி ‘மாஸ்டர்’ படத்துக்கான வேலைகளை துவங்கி விட்டார். இப்போது ‘மாஸ்டர்’ ரெடியாக உள்ளது. ‘கொரோனா’ பிரச்சனை முடிந்தவுடன் ரிலீஸ் தேதியை ஃபிக்ஸ் செய்து கொள்ளலாம் என காத்துக்கொண்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ‘மாஸ்டர்’-க்கு பிறகு ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’ மற்றும் ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ இணைந்து தயாரிக்கும் படத்தை இயக்கவிருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
தற்போது, இதற்காக லோகேஷ் கனகராஜுக்கு ரூ.3 கோடி அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ‘மாஸ்டர்’ படத்துக்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளமே ரூ.3 கோடி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்துக்கு இதை விட நான்கு மடங்கு அதிகமாக சம்பளம் பேசப்பட்டுள்ளதாம். இப்படம் தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் உருவாகப்போகிறதாம். இதில் சூர்யா அல்லது கார்த்தி நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.