தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் ரஜினி மற்றும் கமல் இருவருடன் இணைந்து படம் ஒன்றை இயக்க போவதாக சமீபத்தில் செய்தி ஒன்று வெளியானது. இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவராமல் இருந்த நிலையில், இன்று காலை இந்த வதந்தி குறித்து விரைவில் செய்து அறிவிக்கப்படும் என்று கூறியிருந்தார்கள்.
தற்போது இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகியுள்ளது. கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “எவனென்று நினைத்தாய்” என்ற திரைப்படம் உருவாகவுள்ளதாகவும், இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கவுள்ளதாகவும் தற்போது அதிகாரபூர்வமான தகவல் வெளியிட்டுள்ளார்கள்.
இந்த படம் நடிகர் கமல்ஹாசனுக்கு 232 வது திரைப்படமாகும். தற்போது இணையதளத்தில் நடிகர் கமல்ஹாசனும் இந்தப் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் இது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார்கள். அதனால் இந்த படத்தில் ரஜினி இணைய வாய்ப்பில்லை என்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கமலுடன் இணைந்து பணிபுரிய வாய்ப்பு கிடைத்ததால் உற்சாகத்தில் இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.
https://twitter.com/Dir_Lokesh/status/1306208856909983750?s=19
Another journey begins.
மறுபடியும் உங்கள் நான்.@RKFI @Dir_Lokesh @anirudhofficial pic.twitter.com/ABMwrb45Qa
— Kamal Haasan (@ikamalhaasan) September 16, 2020