அடேங்கப்பா… தெலுங்கில் 5 நாட்களில் ‘லவ் டுடே’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • November 30, 2022 / 11:42 PM IST

கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் . இவர் இயக்கிய கோமாளி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . ஜெயம் ரவி , காஜல் அகர்வால் , உள்ளிட்ட நடிகர்கள் நடித்த இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார் .

கோமாளி படத்திற்கு பிறகு இவர் இயக்கி உள்ள படம் லவ் டுடே . இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனே நாயகனாக நடித்து இருக்கிறார் . மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது . சத்யராஜ் , ராதிகா உள்ளிட்டோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் .இளைஞர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது .

இந்நிலையில் லவ் டுடே படம் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது . இந்த படத்தை தெலுங்கில் டப் செய்து தயாரிப்பாளர் தில் ராஜு வெளியிட்டுள்ளார் . இந்த படம் நவம்பர் 25-ஆம் தேதி தெலுங்கு பேசும் மாநிலங்களில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது . அந்த வகையில் வெளியான 5 நாட்களில் தோராயமாக 8. 60 கோடி வசூல் செய்து உள்ளது என்று கூறப்படுகிறது

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus