விக்னேஷ் சிவனின் அடுத்த பிளான் ?

  • February 23, 2023 / 01:18 AM IST

நடிகர் அஜித் நடிப்பில் துணிவு படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது .இந்த படத்திற்கு பிறகு நடிகர் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் தனது 62 -வது படத்தில் நடிக்க உள்ளார் என்று 8 மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது .

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் விக்னேஷ் சொன்ன கதை லைக்கா நிறுவனத்திற்கும் நடிகர் அஜித்திற்கு திருப்தி அளிக்கவில்லை அதனால் விக்னேஷ் சிவன் – அஜித் படம் உருவாகவில்லை . அஜித் விக்னேஷ் சிவனை நிராகரித்து விட்டார் என்று கூறப்படுகிறது .

இதனால் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது அடுத்த படத்தின் வேலையை தொடங்கி உள்ளார் என்று கூறப்படுகிறது . அந்த படத்தில் ஏற்கனவே விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது லவ் டுடே படம் மூலம் பிரபலமான இயக்குநர் மற்றும் நடிகர் பிரதீப் ரங்கநாதனை நடிக்க வைக்கும் முயற்சியில் உள்ளார் என்று கூறப்படுகிறது .

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus