லவ் டுடே படத்தை கைப்பற்றிய ஒ. டி. டி. நிறுவனம்.

  • November 15, 2022 / 10:46 AM IST

கோமாளி படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் . இவர் இயக்கிய கோமாளி படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது . ஜெயம் ரவி , காஜல் அகர்வால் , உள்ளிட்ட நடிகர்கள் நடித்த இந்த படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்து இருந்தார் .

கோமாளி படத்திற்கு பிறகு இவர் இயக்கி உள்ள படம் லவ் டுடே . இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனே நாயகனாக நடித்து இருக்கிறார் . மேலும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளது . சத்யராஜ் , ராதிகா உள்ளிட்டோரும் முக்கியமான பாத்திரங்களில் நடித்து உள்ளனர் .இளைஞர்கள் மத்தியில் இவருக்கு நல்ல வரவேற்பு உள்ளது .

இந்நிலையில் லவ் டுடே படம் வெற்றிகரமாக இரண்டாவது வாரம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது . இந்த படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்பிலிக்ஸ் ஒ. டி. டி நிறுவனம் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது . விரைவில் இதன் அறிவிப்பு வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus