தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் மணிகண்டன். இவர் ‘காதலும் கடந்து போகும், 8 தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, சில்லுக்கருப்பட்டி, ஏலே, நெற்றிக்கண், ஜெய் பீம், சில நேரங்களில் சில மனிதர்கள்’ ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கியிருக்கிறார். மணிகண்டன் ஹீரோவாக நடித்த ‘குட் நைட்’ என்ற படம் கடந்த ஆண்டு (2023) ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது.
கடந்த பிப்ரவரி 9-ஆம் தேதி மணிகண்டன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய படமான ‘லவ்வர்’ திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரபுராம் வியாஸ் இயக்கியுள்ளார்.
இதில் மணிகண்டனுக்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி ப்ரியா நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது, ‘குட் நைட், லவ்வர்’ ஆகிய 2 படங்களின் ஹிட்டால் நடிகர் மணிகண்டன் தான் ஒப்பந்தமாகப்போகும் புதிய படங்களுக்கு ரூ.2 கோடி சம்பளம் கேட்பதாக தகவல் கிடைத்துள்ளது.